5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!

Forbes 2024 | அமெரிக்காவின் வணிக பத்திரிக்கை நிறுவனமாக ஃபோர்ப்ஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 119.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images)
vinalin
Vinalin Sweety | Published: 14 Oct 2024 10:24 AM

2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களை கொண்டுள்ள அந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், கவுதம் அதானி 2வது இடத்திலும் இருந்தனர். இந்த நிலையில், ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிங்க : Aadhaar Renewal : இன்னும் 2 மாதங்கள் மட்டும்தான் அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணலனா சிக்கல்!

ஃபோர்ப்ஸ் 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியல்

அமெரிக்காவின் வணிக பத்திரிக்கை நிறுவனமாக ஃபோர்ப்ஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 119.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது அதானி குழும தலைவர் கவுதம் அதானி. அவர் சுமார், 116 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : Ratan Tata : வெறும் $5 பில்லியன் சொத்துக்களை $100 பில்லியனாக மாற்றிய ரத்தன் டாடா!

  1. 119.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி.
  2. 116 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி குழும தலைவர் அவுதம் அதானி.
  3. 43.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஓ.பி ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்திரி ஜிண்டால் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
  4. 40.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பிடித்துள்ளார் எச்.சி.எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார்.
  5. 32.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5வது இடத்தை பிடித்துள்ளார் திலீப் ஷங்வி.
  6. 31.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளார் ராதாகிஷன் தமானி.
  7. 30.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7வது இடத்தை பிடித்துள்ளார் சுனில் மிட்டல்.
  8. 24.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்தை பிடித்துள்ளார் குமார் பிர்லா.
  9. 24.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்தை பிடித்துள்ளார் சைரச் பூனவல்லா.
  10. 23.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளது பஜாஜ் குடும்பம்.

இதையும் படிங்க : Gold Vs FD : தங்கம் Vs நிலையான வைப்புநிதி.. இரண்டில் எது சிறந்தது?.. முழு விவரம் இதோ!

இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு

கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு இந்திய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், ஃபோர்ப்ஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 100 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 1 ட்ரில்லியனை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்ககாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் $316 பில்லியன் உயர்ந்துள்ளது. அதன்படி சுமார் 40% வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. பொது குடிமக்களுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு?

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 80% தொழிலதிபர்கள் தங்கள் வருமானத்தில் நல்ல உயர்வை சந்தித்துள்ளனர். அதில் 58 பேர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அதிகரித்துள்ளனர். பெரும்பாலான தொழிலதிபர்கள் நல்ல உயர்வை சந்தித்துள்ள நிலையில், பட்டியலில் முதலில் உள்ள 5 பணக்காரர்கள், மொத்த பணக்காரர்கள் பட்டியலில் $120 பில்லியன் பங்கீடு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News