5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

RBI : அமெரிக்கா, ஜெர்மனியை விட பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா.. ரிசர்வ் வங்கி புகழாரம்!

India Inflation | இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினாலும் உலக அளவில் 5வது இடத்திலே இந்திய பொருளாதாரம் உள்ளது. அதற்கு முன்பாக உள்ள முதல் 4 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உள்ளன. பொருளாதாரத்தில் இந்தியாவை விட சிறந்து விளங்குவதால் இந்த 4 நாடுகளும் பட்டியலில் இந்தியாவுக்கு முன் உள்ளன.

RBI : அமெரிக்கா, ஜெர்மனியை விட பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா.. ரிசர்வ் வங்கி புகழாரம்!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Pavlo Gonchar/SOPA Images/LightRocket via Getty Images)
vinalin
Vinalin Sweety | Published: 16 Sep 2024 18:28 PM

பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா : உலக அளவில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பணவீக்கத்தை மிக சிறப்பாக கையாண்டதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவை விட மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட பல நாடுகள் கடுமையான பணவீக்க சவால்களை சந்தித்த நிலையில், இந்தியா அதனை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறப்படுள்ளது. இந்த நிலையில் இந்தியா பண வீக்கத்தை சிறப்பாக கையாண்டது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!

பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா – ரிசர்வ் வங்கி அறிக்கை

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ரிசர்வ் வங்கி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைந்து செயல்படுத்திய சீர்திருத்தம் காரணமாக உருவான துடிப்பான நிதிநிலை கட்டமைப்பு காரணமாக பணவீக்கம் குறித்த இலக்கு நிர்ணயிக்க முடிந்தது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை இந்தியாவை காட்டிலும் பெரிய பொருளாதார நாடுகள் கடுமையான பணவீக்கம் சவால்களை சந்தித்தன.  இந்த குறிப்பிட்ட காலத்தில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்சை விட பணவீக்கத்தை இந்தியா சிறப்பாக கையாண்டது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?

பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் உலக நாடுகள்

இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினாலும் உலக அளவில் 5வது இடத்திலே இந்திய பொருளாதாரம் உள்ளது. அதற்கு முன்பாக உள்ள முதல் 4 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உள்ளன. பொருளாதாரத்தில் இந்தியாவை விட சிறந்து விளங்குவதால் இந்த 4 நாடுகளும் பட்டியலில் இந்தியாவுக்கு முன் உள்ளன. அதாவது முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவின் பொருளாதாரம் 20.94 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதேபோல இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் பொருளாதாரம் 18.32 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 3வது இடத்தில் உள்ள ஜப்பானின் பொருளாதாரம் 5.05 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களா உள்ள நிலையில், 4வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் பொருளாதாரம் 3.84 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நிலையில் 5வது இடத்தில் உள்ள இந்திய பொருளாதாரம் வெறும் 3.5 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

இந்த 5 நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் மிகவும் குறைவாக உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் மிகவும் குறைவாக உள்ளது. ஆனாலும் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளால் முறையாக கையாள முடியாத பணவீக்கத்தை இந்தியா மிக சிறப்பாக கையாண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்!

பண வீக்கம்  என்றால் என்ன?

பணவீக்கம் என்பது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மொத்த விலை குறையீட்டின் மதிப்பில் ஏற்படும் சதவீத மாற்றம் ஆகும். இது ஒரு ஆண்டுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்படும் மாற்றத்தை அளவிடுவதன் மூலம் கணிக்கப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை  WPI-யை அடிப்படையாக கொண்டு பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. WPI என்பதற்கு Wholesale Price Index என்று பொருள். அதாவது மொத்த விலை குறையீடு ஆகும்.

Latest News