5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar Service : இனி தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை.. இந்தியா போஸ்ட் அதிரடி அறிவிப்பு!

India Post | ஆதார் சேவைகளை நீட்டிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 13,352 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது ஆதார் அட்டையை புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாக, இனி தபால் நிலையங்களிலும் மக்கள் ஆதார் சேவைகளை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Aadhaar Service : இனி தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை.. இந்தியா போஸ்ட் அதிரடி அறிவிப்பு!
மாதிர் புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 23 Oct 2024 15:24 PM

ஆதார் அட்டையை பதிவு செய்யவேண்டும் என்றாலோ, அல்லது அதில் இருக்கும் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் இ சேவை மையங்கள் அல்லது இந்திய தணித்துவ ஆணையத்தின் இணையதளம் மூலமே செய்ய முடியும் நிலை உள்ளது. இந்த நிலையில், ஆதார் சேவைகளை விரிவுப்படுத்தும் வகையில் தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

ஆதார் தகவல்களை புதுப்பித்தல் ஏன் அவசியம்?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது முதல் மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது.

இதையும் படிங்க : EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!

ஆனால் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் இ சேவை மையங்கள் அல்லது இந்திய தனித்துவ ஆணையத்தின் இணையதளம் மூலமே செய்ய முடியும். இதன் காரணமாக ஆதார் இ சேவை மையங்கள் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றன. இதேபோல மொத்தமாக மக்கள் ஆதார் இணையதளத்தை பயன்படுத்துவதால் அதிலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தபால் நிலையங்களில் ஆதார் சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

இந்தியா போஸ்ட் வெளியிட்ட முக்கிய தகவல்

இது குறித்து இந்தியா போஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆதார் சேவைகளை நீட்டிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 13,352 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது ஆதார் அட்டையை புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாக, இனி தபால் நிலையங்களிலும் மக்கள் ஆதார் சேவைகளை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று ஆதார் விவரங்களை புதுப்பித்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஆதார் இ சேவை மையங்களில் கூட்ட நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

இரண்டு சேவைகளை வழங்கும் தபால் நிலையங்கள்

இந்தியா போஸ்ட் தபால் நிலையங்கள் ஆதார் பதிவு மற்றும் ஆதார் புதுப்பித்தல் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ஆதார் பதிவு பொருத்தவரை ஆதாரில் இடம்பெற வேண்டிய பயோமெட்ரிக் தகவல்களை தபால் நிலையங்களில் பதிவு செய்யலாம். இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல தகவல் புதுப்பித்தல் சேவையையும் தபால் நிலையங்களில் வழங்கப்பட உள்ளது. அதாவது பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை தபால் நிலையங்கள் மூலமே அப்டேட் செய்துக்கொள்ளலாம். இதற்கு இ சேவை மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுமோ அவ்வளவு கட்டணம் தபால் நிலையங்களிலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News