இந்தியன் வங்கி ஸ்பெஷல் எஃப்.டி.. 8.05% வட்டி.. அசத்தல் ஸ்கீம் நீட்டிப்பு!
Indian Bank special FD: இந்தியன் வங்கி 8.05 சதவீதம் வட்டி வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கடைசி தேதியை நீட்டித்துள்ளது. புதிய தேததி மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி சிறப்பு எஃப்.டி நீட்டிப்பு: பொதுத்துறை நிதி நிறுவனமான இந்தியன் வங்கி, 2 சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த சிறப்பு திட்டங்களின் காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரிசர்வ் வங்கி 2024 ஆம் ஆண்டின் கடைசி இருமாத நாணயக் கொள்கை மறுஆய்வு முடிவை அறிவிக்கவுள்ள நிலையில் இந்தியன் வங்கி இவ்வாறு அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் மாற்றாமல் வைத்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்
இந்தியன் வங்கி, இந்த் சுப்ரீம் 300 நாள்கள் மற்றும் இந்த் சூப்பர் 400 நாள்கள் ஆகிய இரண்டு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களின் காலக்கெடு டிச.30, 2024ஆம் தேதியோடு நிறைவடையும் என முன்னர் கூறப்பட்டது.
தற்போது, இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் காலக்கெடு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, திட்டங்கள் 2025 மார்ச் 31ஆம் தேதி நிறைவு பெறும் என வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒத்த பைசா வரி இல்ல.. மாதம் ரூ.91 ஆயிரம் வருமானம்: போஸ்ட் ஆபீஸில் அசத்தல் திட்டம்!
திட்டங்களின் சிறப்புகள்
தற்போது நாம் இந்த இரண்டு சிறப்பு எஃப்.டி திட்டங்களின் வட்டி விகிதம் காலம் ஆகியவை குறித்த பார்க்கலாம்.
இந்த் சூப்பர் 400 நாள்கள்
இந்த் சூப்பர் 400 நாள்கள் சிறப்பு எஃப்.டி திட்டத்தில் சாதாரண மக்களுக்கு 7.30 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 7.80 சதவீதம் வரையும், சூப்பர் மூத்தக் குடிமக்களுக்கு 8.05 சதவீதம் வரையும் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த் சுப்ரீம் 300 நாள்கள்
இந்த் சுப்ரீம் 300 நாள்கள் திட்டத்தில், பொது மக்களுக்கு 7.30 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.80 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.05 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.250 முதல் முதலீடு.. இந்தியாவின் டாப் 3 அஞ்சலக திட்டங்கள் தெரியுமா?
மற்ற எஃப்.டி திட்டங்கள்
இந்தியன் வங்கியில் சாதாரண ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களும் முதலீடுக்கு கிடைக்கின்றன. இந்தத் திட்டங்களுக்கு 2.80 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன. இந்த வட்டி விகிதங்கள் 2024 ஜூன் 12ஆம் தேதி முதல் அமலில் உள்ளன.
முதலீடு செய்வது எப்படி?
இந்தியன் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்வது மிகவும் எளிதானதாக உள்ளது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய அருகில் உள்ள வங்கி கிளையை அணுகலாம். அல்லது ஆன்லைன் வாயிலாகவும் எளிதில் எஃப்.டி முதலீட்டை தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.15 ஆயிரம் முதலீடு, ரூ.10 லட்சம் ரிட்டன்.. டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!