PAN Card : பெயர் முதல் பிறந்த தேதி வரை.. பான் கார்டு ஆன்லைன் திருத்தங்களுக்கு அதிரடி ரூல்ஸ்.. முழு விவரம்!
New Rules | ஆன்லைனில் பான் கார்டு திருத்துவதற்கு சில புதிய விதிகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்த புதிய விதிகள் என்ன, பான் கார்டில் விவரங்களை ஆன்லைனில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பான் கார்டு முக்கிய ஆவணமாக கருதப்படுவதால் அதில் பிழை இல்லாமல் வைத்திருப்பது முக்கியம் ஆகும். முன்பெல்லாம் பான் கார்டில் ஏதேனும் பிழை அல்லது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அலுவலகங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை திருத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், ஆன்லைனில் பான் கார்டு திருத்துவதற்கு சில புதிய விதிகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்த புதிய விதிகள் என்ன, பான் கார்டில் விவரங்களை ஆன்லைனில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!
பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் பான் கார்டு
பான் கார்டு பொதுமக்களின் வாழ்வில் ஒரு முக்கிய ஆவணமாகவும், ஆதாரமாகவும் கருதப்படுகிறது. பான் கார்டு இல்லையென்றால் பல வேலைகளை நம்மால் செய்து முடிக்க முடியாது. அந்த அளவிற்கு பான் கார்டு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக பான் கார்டு இல்லை என்றால் நிதி சார்ந்த சேவைகளை செய்ய முடியாமல் போய்விடும். எனவே, தான் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பான் கார்டை நிலையான கணக்கு (PAN – Permanent Account Number) எண் என்று கூறுவர். இதன் மூல ஒருவரின் நிதி சார்ந்த தகவல்கள், பண பரிவர்த்தனை, வங்கி கடன் உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமககளுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, ரூ.14 மற்றும் ரூ.21 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
பான் கார்டு திருத்தம் குறித்து அரசு அறிவித்த புதிய விதகள்
- பான் கார்டில் திருத்தம் மேற்கொள்ள அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய தேவை இல்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் சுலபமாக செய்து முடிக்கலாம்.
- அதற்கு முதலில் இந்திய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.incometaxindia.gov.in) செல்ல வேண்டும்.
- அங்கு உங்களுடைய பான் கார்டு எண்ணை பதிவு செய்து லாக் இன் செய்ய வேண்டும்.
- பிறகு பான் கார்டு திருத்தம் (PAN card correction) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இதன் பிறகு நீங்கள் என்ன என்ன திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ அவற்றை பதிவிட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- திருத்தத்திற்கான படிவத்தை பதிவேற்றம் செய்து அதற்கு ரூ.106 தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
- கட்டணம் செலுத்தி முடித்த பிறகு, Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு ஒரு ரிசிப்ட் வரும்.
- அந்த ரிசிப்டில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை பயன்படுத்தி, உங்கள் பான் கார்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை நீங்கள் சோதனை செய்துக்கொள்ளலாம்.
மேற்கண்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் சுலபமாக ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை திருத்தம் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : 9.5% வட்டி வழங்கும் புதிய Super FD திட்டம் தொடக்கம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
அரசின் புதிய விதிகளின்படி, நீங்கள் பான் கார்டை இந்திய வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே திருத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, NSDL மற்றும் UTIITSL இணையதளங்கள் மூலமும் திருத்தம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.