Ration Shop : ரேஷன் பொருட்கள் விற்பனையில் அதிரடி மாற்றம்.. இனி இந்த அளவில் தான் பொருட்கள் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!
New Rules | ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவீடு குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, அரசின் இந்த புதிய விதிகளின் படி, ரேஷன் அட்டை மூலம் வழங்கப்படும் கோதுமை மற்றும் அரிசி ஆகிய பொருட்களின் அளவீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்பங்களுக்கு மாநிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபடும். இந்த நிலையில், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யபப்டும் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே வழங்கப்பட்ட அளவீல் இனி பொருட்கள் வழங்கப்படாது எனவும், புதிய அளவின்படியே ரேஷன் அட்டை பொருட்கள் வழங்கப்படு என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த புதிய விதிகள் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரேஷன் பொருட்கள் விற்பனையில் என்ன, என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Elon Musk : டிரம்ப் வெற்றி எதிரொலி.. அதிரடியாக உயர்ந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் அட்டை
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில், ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி மூலம் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ரேஷன் பொருட்கள் வழங்குவதில் அதிரடி மாற்றம்
ரேஷன் அட்டையில் வழங்கப்படும் இந்த பொருட்கள் ஒவ்வொரு அட்டைக்கும் ஒவ்வொரு வகையாக வழங்கப்படும். பொதுமக்களின் பொருளாதார நிலையை வைத்து அவர்களுக்கு வெவ்வேறு ரேஷன் அட்டை வழங்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றார்போல் பொருட்களும் வழங்கப்படும். இந்த நிலையில், பொருட்கள் வழங்குவதில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இதுவரை வழங்கப்பட்ட அளவிற்கு பதிலாக வேறு அளவீடுகளின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!
ரேஷன் பொருட்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவீடு குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, அரசின் இந்த புதிய விதிகளின் படி, ரேஷன் அட்டை மூலம் வழங்கப்படும் கோதுமை மற்றும் அரிசி ஆகிய பொருட்களின் அளவீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அரசி மற்றும் கோதுமை வெவ்வேறு அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டையும் சம அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக 3 கிலோ அரிசியுடன் 2 கிலோ கோதுமை வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டையும் சம அளவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 2.5 கிலோ கோதுமை மற்றும் 2.5 கிலோ அரசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அந்த்யோதயா அட்டைக்கும் அதிரடி மாற்றம்
இதேபோல அந்த்யோதயா அட்டைக்கு வழங்கப்படும் உணவு தானியங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த குறிப்பிட்ட அட்டைதாரர்களுக்கு 30 கிலோ அரிசியுடன் 14 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு கொண்டுவந்துள்ள அதிரடி மாற்றத்தின் மூலம் இந்த வகை குடும்ப அட்டை தாரர்களுக்கு 18 கிலோ அரிசியுடன் 17 கிலோ கோதுமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.