Share Market : கோவிட் 19-க்கு பிறகு அக்டோபரில் கடுமையாக சரிந்த இந்திய பங்குச்சந்தை.. தரவுகள் கூறுவதுன் என்ன? - Tamil News | Indian share market down 5 percentage after a huge crash during Covid pandemic | TV9 Tamil

Share Market : கோவிட் 19-க்கு பிறகு அக்டோபரில் கடுமையாக சரிந்த இந்திய பங்குச்சந்தை.. தரவுகள் கூறுவதுன் என்ன?

History | கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% குறைந்து வர்த்தகம் நடைபெற்றது.

Share Market : கோவிட் 19-க்கு பிறகு அக்டோபரில் கடுமையாக சரிந்த இந்திய பங்குச்சந்தை.. தரவுகள் கூறுவதுன் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Oct 2024 15:23 PM

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் இழப்புகளை எதிர்க்கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி அன்று மட்டும் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.9 லட்சம் கோடியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த கால பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் தான் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க : UPI Payment : இனிமேல் இதை செய்ய UPI பேமண்ட் கட்டாயம்.. செபி கொண்டுவந்த புதிய விதிகள்.. நவம்பர் 1 முதல் அமல்!

ஈரான் – இஸ்ரேல் போரால் பாதிக்கும் இந்திய பங்குச்சந்தை

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. அதாவது ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை தீவிரமடைய செய்தது.

இதையும் படிங்க : Fixed Deposit : SBI-ன் 444 நாட்களுக்கான FD Vs ICICI-ன் 15 மாதங்களுக்கான FD.. அதிக லாபம் வழங்கும் திட்டம் எது?

ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்ட இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்த ராணுவத்தை திரட்டிய இஸ்ரேல், இரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அங்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்ட சம்பவம் போரின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்தன. அதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. அதாவது முந்தைய அமர்வில் BSE-ல் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.453.7 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்த அமர்வில் அது ரூ.444.7 லட்சம் கோடியாக குறைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடையை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

இந்த நிலையில்தான், கடந்த கால பங்குச்சந்தை நிலவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த தரவுகளுடன் ஒப்பிடுகையில், கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு அக்டோபரில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தையின் கடந்த கால தரவுகள்

  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய பங்குச்சந்தை 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பங்குச்சந்தை 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய பங்குச்சந்தை 4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பங்குச்சந்தை 4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பங்குச்சந்தை 4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய பங்குச்சந்தை 4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய பங்குச்சந்தை 5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய பங்குச்சந்தை 5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பங்குச்சந்தை 5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பங்குச்சந்தை 6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பங்குச்சந்தை 23 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

மேற்குறிப்பிட்ட தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் இந்திய பங்குச்சந்தை 5 சதவீதம் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?
சியா விதைகளுடன் இந்த உணவுகளை ஒரு போதும் சேர்க்கக்கூடாது..!
இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!