5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

Sensex and Nifty | நேற்றும் இந்திய பங்குச்சந்தை சரிவுடனே தொடங்கியது. நேற்று (அக்டோபர் 17) காலை 10 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 315.93 புள்ளிகள் குறைந்து 81,185.43 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல நிஃப்டி 50 143.15 புள்ளிகள் குறைந்து 24,828.15 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?
பங்குச்சந்தை
vinalin
Vinalin Sweety | Published: 18 Oct 2024 11:08 AM

கடந்த சில நாட்களாகவே கடும் ஏற்றம் இறக்கத்தை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை இன்று (அக்டோபர் 18) சரிவுடன் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்த தொடர் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பிறகு ஏற்பட்ட உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

போரால் பாதித்த இந்திய பங்குச்சந்தை

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. அதாவது ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை தீவிரமடைய செய்தது.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கியச் செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

ஹமாஸ் தலைவரை கொலை செய்த இஸ்ரேல்

ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்ட இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்த ராணுவத்தை திரட்டிய இஸ்ரேல், இரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அங்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதுமட்டுமன்றி ஹமாஸ் தலைவரின் கடைசி நேர வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!

சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

இந்த நிலையில், இந்திய பங்குசந்தை இன்று (அக்டோபர் 18) சரிவுடன் தொடங்கியுள்ளது. அதாவது இன்று காலை 10 மணி நிலவரப்படி, வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 400.17 புள்ளிகள் குறைந்து 80,606.44 ஆக வரத்தகம் நடைபெற்றது. இதேபோல நிஃப்டி 96.85 புள்ளிகள் குறைந்து 24,653 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது. இன்றைய பங்குச்சந்தையின் நிலவரத்தின்படி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, எய்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகிய பங்குகள் நிஃப்டி 50-ல் உயர்வை சந்தித்துள்ளன. இந்த நிலையில், ஐடி பங்குகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

நேற்றைய பங்குச்சந்தை நிலவரம்

நேற்றும் இந்திய பங்குச்சந்தை சரிவுடனே தொடங்கியது. நேற்று (அக்டோபர் 17) காலை 10 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 315.93 புள்ளிகள் குறைந்து 81,185.43 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல நிஃப்டி 50 143.15 புள்ளிகள் குறைந்து 24,828.15 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. நேற்றைய பங்குச்சந்தையின் நிலவரப்படி, இன்ஃபோசிஸ், ஹிண்டல்கோ, டாக்டர் ரெட்டிஸ், டெக் மஹிந்திரா மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகியவை நிஃப்டி 50 நல்ல உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Latest News