Share Market : தொடக்கத்திலே 900 புள்ளிகள் சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம்!
Sensex and Nifty | நேற்று (நவம்பர் 6) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, BSE சென்செக்ஸ் 251.87 புள்ளிகள் உயர்ந்து 79,728.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல, NSE நிஃப்டி 74.20 புள்ளிகள் உயர்ந்து 24.287.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. அதாவது இன்று வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தையின் இந்த சரிவுக்கு அமெரிக்க தேர்தல் முடிவுகள் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இன்றை பங்குச்சந்தையின் நிலவரம் என்ன, அமெரிக்க அதிபர் தேர்தல் பங்குச்சந்தையில் சரிவை ஏற்படுத்தியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : FD Interest Rate : டாப் 5 நிலையான வைப்புநிதி திட்டங்கள்.. 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும வங்கிகள்!
பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மத்திய கிழக்கு பிரச்னை
மத்திய கிழக்கு பிரச்னை கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையில் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதாவது, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நிலவி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில், ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, தாக்குதல் நடத்தியது ஈரான். ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போரை மேலும் வலுவடைய செய்தது.
மாறி மாறி ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் பங்குச்சந்தை
ஈரான் நடத்திய கடுமையான தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதன்படி, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டார். சின்வாரின் கொலை ஹமாஸ் அமைப்பினரை ஆத்திரமடைய செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இரண்டு நாடுகளும் மீண்டும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச்சந்தைகளும் மத்திய கிழக்கு பிரச்னையால் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இதையும் படிங்க : MIS : எந்தவித உழைப்பும் இன்றி மாதம் ரூ.5,500 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மாத வருமான திட்டம்!
நேற்றைய பங்குச்சந்தை நிலவரம்
நேற்று (நவம்பர் 6) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, BSE சென்செக்ஸ் 251.87 புள்ளிகள் உயர்ந்து 79,728.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல, NSE நிஃப்டி 74.20 புள்ளிகள் உயர்ந்து 24.287.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. அதன்படி, ஒட்டுமொத்த பங்குச்சந்தை நிலவரப்படி, ஐடி துறைகள் 3% உயர்வை கண்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
நேற்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று (நவம்பர் 7) சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை 10:41 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 858.03 புள்ளிகள் குறைந்து 79,520.10 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல, நிஃப்டி 50 281.10 புள்ளிகள் குறைந்து 24,202.95 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.
இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் ரிசர்வர் வங்கியின் வட்டி விகிதங்களை எதிர்ப்பார்த்து காத்திருப்பதால் இந்திய பங்குச்சந்தை இந்த சரிவை சந்தித்துள்ளதாக முதலீட்டாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.