Share Market : தீபாவளியில் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன? - Tamil News | Indian Share Market started with down today October 31 2024 | TV9 Tamil

Share Market : தீபாவளியில் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

Sensex | மத்திய கிழக்கு பிரச்னை இந்திய பங்குச்சந்தையின் இந்த கடும் ஏற்ற, இறக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மிக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழி தாக்குதல் நடத்தியது. 

Share Market : தீபாவளியில் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

31 Oct 2024 13:29 PM

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இன்று (அகோபர் 31) ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்தியா மட்டுமன்றி அமெரிக்க பங்குச்சந்தையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : நிலையான வைப்புநிதி திட்டம்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய வங்கிகள்!

மத்திய கிழக்கு பிரச்னையால் கடும் பாதிப்பை சந்தித்த பங்குச்சந்தை

மத்திய கிழக்கு பிரச்னை இந்திய பங்குச்சந்தையின் இந்த கடும் ஏற்ற, இறக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மிக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழி தாக்குதல் நடத்தியது.  ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலில் இஸ்ரேல் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த போரை மேலும் வலுவடைய செய்தது.

இதையும் படிங்க : Aavin : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய வியாபாரம்.. ரூ.115 கோடி வருமானம் ஈட்டிய ஆவின்!

உலக அளவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய போர்

ஈரானின் இந்த கடுமையான தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தியது. அதன்படி, காசா மீது இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டார். சின்வாரின் கொலை ஹமாஸ் அமைப்பினரை ஆத்திரமடைய செய்தது. இந்த நிலையில், இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்னை காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சவால்களை சந்தித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? தீபாவளி நாளில் காத்திருக்கும் பரிசு!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன?

இன்று தீபாவளி (அக்டோபர் 31) தினத்தன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி இன்றைய 10 மணி நிலவரத்தின் படி, BSE சென்செக்ஸ் 199.13 புள்ளிகள் குறைந்து 79,743 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல, NSE நிஃப்டி 50 126 புள்ளிகள் குறைந்து 24,340 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Aadhaar : ஆதார் அட்டையை சான்றாக எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய தீர்ப்பு.. முழு விவரம் இதோ!

உயர்வை சந்தித்த பங்குகள்

இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கினாலும் சில பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. அதன்படி, சிப்லா, எல்&டி, ஓஎன்ஜிசி, ஹீரோ மோடோகார்ப் மற்றும் இண்டஸ்லேண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன.

சரிவை சந்தித்த பங்குகள்

இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், சில நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்துத்துள்ளன. அதன்படி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இதையும் படிங்க : Small Savings : சிறுசேமிப்பு திட்டங்களில் சிறந்தது எது.. எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

தீபாவளி தினத்தன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊறவைத்த வெந்தயத்தை காலையில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா?
இஞ்சி ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?
அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..!