Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

Sensex and Nifty | நேற்று (நவம்பர் 12) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் முடிவடைந்தது. அதாவது சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 250 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகம் நடைபெற்றது. குறிப்பாக,  சென்செக்ஸ் 820.97 புள்ளிகள் குறைந்து 78,675.18 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல, NSE நிஃப்டி 50 257 புள்ளிகள் குறைந்து 24,000 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

13 Nov 2024 11:36 AM

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு பிரச்னை ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 13) சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் சுமார் 5.76 லட்சம் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம் என்ன, இன்ற பங்குச்சந்தையில் உயர்வை சந்தித்த நிறுவனங்கள் எவை, சரிவை சந்தித்த நிறுவனங்கள் எவை, இந்த கடும் சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 37 கோடி பயணிகள் இருந்தும் இழுத்து மூடும் விமான நிறுவனங்கள்.. என்னதான் சிக்கல், ஏன் இந்த நஷ்டம்?

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை கடந்த பல நாட்களாகவே கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு பிரச்னை ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த 2023, அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நிலவி வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த போரை தீவிரமடைய செய்தது.

இதையும் படிங்க : FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!

பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் போர்

இந்த நிலையில், ஈரான் நடத்திய கடுமையான தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது மீண்டும் பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். யாஹ்யா சின்வாரின் இழப்பு, ஹமாஸ் அமைப்பினரை கடும் ஆத்திரமடைய செய்தது. இதனால், இரண்டு நாடுகளும் தற்போது மீண்டும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த காரணமாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதேபோல உலக நாடுகளின் பங்குச்சந்தைகளும் மத்திய கிழக்கு பிரச்னையால் கடும் சரிவை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

நேற்றைய பங்குச்சந்தை நிலவரம்

நேற்று (நவம்பர் 12) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் முடிவடைந்தது. அதாவது சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 250 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகம் நடைபெற்றது. குறிப்பாக,  சென்செக்ஸ் 820.97 புள்ளிகள் குறைந்து 78,675.18 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல, NSE நிஃப்டி 50 257 புள்ளிகள் குறைந்து 24,000 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்று இந்திய பங்குச்சந்தை S&P BSE சென்செக்ஸ் 76.81 புள்ளிகள் குறைந்து 78,598.37 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல, நிஃப்டி 50 75 புள்ளிகள் குறைந்து 23,808.45 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று காலை மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.5.67 லட்சம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!