Share Market : அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி.. சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன? - Tamil News | Indian Share Market started with fall today November 5 2025 ahead of US president election | TV9 Tamil

Share Market : அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி.. சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

Sensex and Nifty | அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு உலக மத்திய வங்கிகளிடமிருந்து வரவிருக்கும் பொருளாதார முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.

Share Market : அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி.. சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

05 Nov 2024 12:08 PM

இந்திய பங்குச்சந்தை கடந்த பல நாட்களாகவே ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 5) சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு உலக மத்திய வங்கிகளிடமிருந்து வரவிருக்கும் பொருளாதார முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : நவம்பர் 15 முதல் கிரெடிட் கார்டுகளில் 15 மாற்றம்.. ஐசிஐசிஐ வங்கி விதிகள் என்ன தெரியுமா?

மத்திய கிழக்கு பிரச்னையால் கடுமையான பாதிப்பை சந்திக்கும் பங்குச்சந்தை

மத்திய கிழக்கு பிரச்னை காரணமாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே இந்த கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மிக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் மிக கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது. அதாவது, ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது ஈரான். ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த போரை மேலும் வலுவடைய செய்துள்ளது.

இதையும் படிங்க : ட்ரேடிங் பெயரில் நடக்கும் பெரிய மோசடி.. எச்சரிக்கை கொடுத்த செபி.. முழு விவரம்!

மாறி மாறி தாக்குதல் நடத்திக்கொள்ளும் ஈரான் மற்றும் இஸ்ரேல்

ஈரானின் இந்த கடுமையான தாக்குதலால் ஆத்திடமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது எதிர் தாக்குதல் நடத்தியது. அதன்படி, காசா மீது இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சின்வாரின் கொலை ஹமாஸ் அமைப்பினரை ஆத்திரமடைய செய்தது. இதன் காரணமாக, இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்னை காரணமாக இந்திய பங்குச்சந்தை மேலும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச்சந்தைகளும் மத்திய கிழக்கு பிரச்னையால் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : உஷார்.. SBI வங்கி பெயரில் மோசடி.. தவிர்க்க இந்த 4 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, NSE நிஃப்டி 50 321.20 புள்ளிகள் குறைந்து 23,983.15 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல BSE சென்செக்ஸ் 941.88 புள்ளிகள் குறைந்து 78,782 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலியாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சரிவை சந்தித்த பங்குகள்

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கிய நிலையில், 5 முக்கிய பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதன்படி நிஃப்டி 50-ல் மோடோகார்ப், பஜாஜ் ஆட்டோ, அதானி துறைமுகம், கிரேசிம், பிபிசிஎல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் கடுமையாக சரிவை சந்தித்துள்ளன.

இதையும் படிங்க : FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு உலக மத்திய வங்கிகளிடமிருந்து வரவிருக்கும் பொருளாதார முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!