Share Market : உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?
Sensex and Nifty | நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. அதாவது, நேற்று காலை 10:41 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 858.03 புள்ளிகள் குறைந்து 79,520.10 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல, நிஃப்டி 50 281.10 புள்ளிகள் குறைந்து 24,202.95 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று (நவம்பர் 7) கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, இன்று (நவம்பர் 8) உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கினாலும், சில பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. குறிப்பாக RVNL பங்குகள் 5 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் லாபத்தில் 27 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : அம்பானியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை.. யார் அந்த தொழிலதிபர்.. டாப் 10 லிஸ்ட்!
ஈரான் – இஸ்ரேல் போரால் பாதிக்கும் இந்திய பங்குச்சந்தை
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் கடும் போரால், கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையில் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடும் போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலில், இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையேயான போரை மேலும் வலுவடைய செய்தது.
ஈரான் நடத்திய கடுமையான தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது மீண்டும் பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டார். யாஹ்யா சின்வாரின் கொலை, ஹமாஸ் அமைப்பினரை ஆத்திரமடைய செய்தது. இதனால், இரண்டு நாடுகளும் மீண்டும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த காரணமாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச்சந்தைகளும் மத்திய கிழக்கு பிரச்னையால் கடும் சரிவை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நேற்றைய பங்குச்சந்தை நிலவரம்
நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. அதாவது, நேற்று காலை 10:41 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 858.03 புள்ளிகள் குறைந்து 79,520.10 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல, நிஃப்டி 50 281.10 புள்ளிகள் குறைந்து 24,202.95 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இந்திய பங்குச்சந்தையின் நேற்றைய சரிவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது.
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை 10.24 மணி நேர நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ், 65.31 புள்ளிகள் உயர்ந்து, 79,607.10 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல, NSE நிஃப்டி 50 5.30 புள்ளிகள் உயர்ந்து 24,2024.65 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.
இதையும் படிங்க : Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!
இன்றைய பங்குச்சந்தையில் உயர்வை சந்தித்த பங்குகள்
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வை சந்தித்துள்ள நிலையில், சில பங்குகள் நல்ல உயர்வை சந்தித்துள்ளன. அதாவது, விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹிண்டல்கோ மற்றும் பெல் உள்ளிட்ட நிறுவனங்கள், இன்றைய பங்குச்சந்தையில் உயர்வை சந்தித்த டாப் 5 பங்குகளாக உள்ளன.
இன்றைய பங்குச்சந்தையில் சரிவை சந்தித்த பங்குகள்
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வை சந்தித்துள்ள நிலையில், சில பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதாவது, BPCL, டாக்டர் ரெட்டி, ட்ரெண்ட், கோல் இந்தியா, மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இன்றைய பங்குச்சந்தையில் சரிவை சந்தித்த டாப் 5 பங்குகளாக உள்ளன.