Share Market : உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. டாடா பங்குகளில் கவனம் செலுத்தும் முதலீட்டாளர்கள்!
Sensex and Nifty | ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஒரே வாரத்தில் 4,000 புள்ளிகள் சரிவை சந்தித்த நிலையில், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.16 லட்சம் கோடியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவிய நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு பங்குசந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இன்று (அக்டோபர் 10) ஆசிய சந்தைகள் உயர்வை சந்தித்துள்ள நிலையில், வர்த்தக தொடக்கத்திலேயே பங்குச்சந்தை நல்ல உயர்வை கண்டுள்ளது. இதற்கு, நேற்று நடைபெற்ற நாணய கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளும் ஒருவித காரணமாக கருதப்படுகிறது. நாணய கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் உள்ளிட்டவை குறித்து ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வழிவகை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான பங்குச்சந்தை நிலவரத்தை பார்ப்போம்.
இதையும் படிங்க : DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. வெளியான முக்கிய தகவல்!
இந்திய பங்குச்சந்தையை கடுமையாக பாதித்த ஈரான் – இஸ்ரேல் போர்
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை விரிவடைய செய்துள்ளது. ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்டுள்ள இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்த ராணுவத்தை திரட்டிய இஸ்ரேல், இரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அங்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இந்த போர் ஈரான் – இஸ்ரேலுக்கு மட்டுமன்றி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் இது உலக பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க : Gold Vs FD : தங்கம் Vs நிலையான வைப்புநிதி.. இரண்டில் எது சிறந்தது?.. முழு விவரம் இதோ!
ஒரே வாரத்தில் ரூ.16 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
இந்த போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்து வந்தது. குறிப்பாக ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஒரே வாரத்தில் 4,000 புள்ளிகள் சரிவை சந்தித்த நிலையில், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.16 லட்சம் கோடியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவிய நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு பங்குசந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்படி, கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை உயர்வை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
அதன்படி, நேற்று வர்த்தக தொடக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 129.72 புள்ளிகள் உயர்ந்து 81,764.53 புள்ளிகளாக இருந்தது. இதேபோல நிஃப்டி, 46.35 புள்ளிகள் உயர்ந்து 25,059.50 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 10) வர்த்த தொடகத்திலேயே பங்குச்சந்தை உயர்வை கண்டுள்ளது. அதன்படி, இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 110.95 புள்ளிகள் உயர்ந்து 81,578.05 புள்ளிகளாகவும், நிஃப்டி 19.80 புள்ளிகள் உயர்ந்து 20,001.75 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது.
இதையும் படிங்க : Crude Oil : 7 நாட்களில் 13% விலை உயர்ந்த கச்சா எண்ணெய்.. தற்போதைய நிலவரம் என்ன?
நேற்று தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரிழந்த நிலையில், டாடா நிறுவனத்தின் பங்குகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. டிசிஎஸ், டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டவற்றின் பங்குகளை வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்கள் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்த கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.