5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Share Market : மீண்டும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. கடும் சரிவில் இண்டஸ்லேண்ட் வங்கி!

Sensex | கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்தன.

Share Market : மீண்டும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. கடும் சரிவில் இண்டஸ்லேண்ட் வங்கி!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 25 Oct 2024 11:07 AM

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்தை கண்டு வரும் நிலையில் இன்று ( அக்டோபர் 25) வெள்ளிக்கிழமை காலை பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை எதிர்பாராத விதமாக கடும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த நிலையில், தொடர் சரிவை சந்தித்து வரும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?

இஸ்ரேல் – ஈரான் போரால் பாதிக்கப்படும் பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தையில் இத்தைய ஏற்ற, இறக்கம் இருப்பதற்கு மத்திய கிழக்கு பிரச்னை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது ஈரான். இந்த தாக்குதலில் இஸ்ரேல் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையேயான போரின் தீவிரத்தை அதிகரிக்க செய்தது. இதனால் கடும் கோபமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டார். இது ஒரு நாடுகளின் பகையை தீவிரமடைய செய்துள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : SBI-ன் 444 நாட்களுக்கான FD Vs ICICI-ன் 15 மாதங்களுக்கான FD.. அதிக லாபம் வழங்கும் திட்டம் எது?

ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்தன. அதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. அதாவது முந்தைய அமர்வில் BSE-ல் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.453.7 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் அடுத்த அமர்வில் அது ரூ.444.7 லட்சம் கோடியாக குறைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடையை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க : UPI Payment : இனிமேல் இதை செய்ய UPI பேமண்ட் கட்டாயம்.. செபி கொண்டுவந்த புதிய விதிகள்.. நவம்பர் 1 முதல் அமல்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்த நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை 10.02 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை S&P BSE சென்செக்ஸ் 370.19 புள்ளிகள் சரிந்து 79.694.97 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல NSE நிஃப்டி 50 141 புள்ளிகள் சரிந்து 24,258.40 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.

உயர்வை சந்தித்த நிறுவனங்கள்

இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கினாலும், சில நிறுவனங்கள் நல்ல உயர்வை கண்டுள்ளன. அதன்படி, நிஃப்டி 50-ல் ஐடிசி, பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்வை சந்தித்துள்ளன.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

சரிவை சந்தித்த நிறுவனங்கள்

இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், சில நிறுவனங்களும் கடும் சரிவை சந்தித்துள்ளன. இண்டஸ்லேண்ட் வங்கி, எம்&எம், அதானி எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக இண்டஸ்லேண்ட் வங்கி சுமார் 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

Latest News