5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PPF : ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.82 லட்சம் வருமானம் பெறலாம்.. இந்த PPF திட்டம் குறித்து கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Investment Scheme | பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைவரும் கட்டாயம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாரு பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவே அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

PPF : ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.82 லட்சம் வருமானம் பெறலாம்.. இந்த PPF திட்டம் குறித்து கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 05 Nov 2024 14:55 PM

பிபிஎஃப் திட்டம் என்பது பொது வருங்கால வைப்புநிதி திட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காரணம் இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அதுமட்டுமன்றி இந்த திட்டத்திற்கு அதிக வட்டியும் வழங்கப்படுவதால், இந்த திட்டத்தின் மூலம் சிறந்த லாபத்தையும் பெற முடியும். இந்த நிலையில், பிபிஎஃப் திட்டத்தில் ரூ.10,000 முதலீடு செய்து ரூ.82 லட்சம் வருமானம் ஈட்டுவது எப்படி, முதலீடு மற்றும் வட்டி சார்ந்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : டாப் 5 FD திட்டங்கள்.. 1 ஆண்டு திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

அதிக வட்டியுடன் கூடிய லாபத்தை தரும் பிபிஎஃப் திட்டம்

பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைவரும் கட்டாயம் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாரு பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவே அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த வட்டியுடன் கூடிய நல்ல வருமானம் பெற முடியும்.

இதையும் படிங்க : பெற்றோரின் ஓய்வூதியத்தில் எந்த குழந்தைக்கு முதல் உரிமை? புது விதி சொல்வது இதுதான்!

ரூ.10,000 முதலீடு செய்தால் ரூ.82 லட்சம்

இவ்வாறு பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் முதலீட்டு திட்டம் தான் PPF. தனியார் அல்லது அரசு துறைகளில் பணிபுரியும் நபர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஊழியர்கள் தங்களின் பணி காலத்தில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வந்தால், தாங்கள் ஓய்வு பெற்ற பிறகு வட்டியுடன் சேர்த்து மொத்த தொகையாக பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில், இந்த பிபிஎஃப் திட்டத்தில் ரூ.10,000 முதலீடு செய்து, ரூ.82 லட்சம் வருமான பெறுவது எப்படி என பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

பிபிஎஃப் திட்டம் என்றால் என்ன?

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த  பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். இதுவே இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்த 15 ஆண்டுகள் கழித்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திட்டத்தை நீட்டிக்கலாம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள்.. தனியார் வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

முதலீடு செய்வது எப்படி

இந்த பிபிஎஃப் திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஆண்டுக்கு மொத்தமாக ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதுவே 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 25 ஆண்டுகளில் மொத்தம் ரூ.30,00,000 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். பிபிஎஃப் திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி 25 ஆண்டுகளுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.82,46,412 கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வட்டி மட்டுமே ரூ.50,46,412 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. தனியார் வங்கிகளின் அக்டோபர் மாத வட்டி விகிதம்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News