5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Bonds : தங்க பத்திரம் உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள்.. எதை கவனிக்கனும்? வட்டி மற்றும் முதலீட்டு விவரம்!

Investment Savings Bonds | ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்களுக்கான அரையாண்டுக்கான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரையாண்டிக் கடைபிடிக்கப்பட்டது போலவே இந்த அரையாண்டும் 8.05% வட்டி மாற்றமில்லாமல் தொடர்ப்படுகிறது. சிறந்த வட்டி மற்றும் நம்பகத் தன்மை காரணமாக இந்த திட்டம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Gold Bonds : தங்க பத்திரம் உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள்.. எதை கவனிக்கனும்? வட்டி மற்றும் முதலீட்டு விவரம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 09 Jul 2024 15:48 PM

ரிசர்வ வங்கி மாறும் வட்டி விகித பத்திரம் : ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்களுக்கான அரையாண்டுக்கான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தை அரையாண்டாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் அரையாண்டுக்கான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முந்தைய அரையாண்டில் இருந்தது போலவே இந்த அரையாண்டிலும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 8.05 % ஆக தொடர்கிறது. இந்த வட்டி விகிதம் காரணமாக இந்த பத்திரங்கள் அதிக அளவு கவனத்தை பெற்று வருகின்றன. இந்நிலையில் இதில் இருக்கும் சாதக பாதங்கள், இந்த திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாறும் வட்டி விகித பத்திரத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

ரிசர்வ் வங்கி அரசு சார்பில் தங்க பத்திரம் உள்ளிட்ட பல்வேறு பத்திரங்களை வெளியிட்டு வருகிறது.  அதில் மாறும் வட்டி விகித பத்திரங்களுக்கான வட்டி விகிதம் முதலீடு காலத்தில், வட்டி விகித சூழலுக்கு ஏற்ப அமையும். இந்த மாறும் வட்டி விகித பத்திரங்களின் வட்டி விகிதம் அரையாண்டிற்கு ஒருமுறை மாறும். அதாவது வருடத்தில் இரண்டு முறை இந்த திட்டத்தின் வட்டி மாற்றப்படும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்களுடன் இணைக்கப்பட்ட இந்த மாறும் வட்டி விகித பத்திரங்களுக்கான வட்டி விகிதம் , இந்த சான்றிதழ் வட்டியை விட, 35 அடிப்படை புள்ளிகள் அதிகமாக இருக்கும். அரசின் உத்தரவாதத்துடன் அதிக பலனை அளிப்பதால் இந்த பத்திரங்கள் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

இதையும் படிங்க : மாதம் ரூ.40-க்கும் குறைவாக செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம்.. முழு விவரம் இதோ!

பத்திரம் குறித்த மேலும் சில தகவல்கள்

இந்த மாறும் வட்டி விகித பத்திரங்களின் முதிர்வு காலம் சுமார் 7 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் இருந்து இடையில் விலக முடியாது என்றாலும் மூத்த குடிமக்களுக்கு சில நிபந்தனைகளுடன் விலக அனுமதி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்வது வரி விலக்கிற்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மாதம் ரூ.20,000 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

இந்த பத்திரங்களை பரிவர்த்தனை செய்யவோ, மற்றவோ முடியாது. அதேபோல அவற்றை அடமானமும் வைத்து பணம் பெறவும் முடியாது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரம்பு கிடையாது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் வங்கிகள் மூலம் எளிதாக முதலீடு செய்யலாம்.

Latest News