சரிவை சந்திக்கும் தங்கம்.. இது முதலீட்டுக்கு உகந்த நேரமா?

gold investment: மக்கள் விரும்பும் மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கத்தின் ஏற்ற இறக்க நிலவரத்துக்கு காரணம் என்ன? இது முதலீட்டுக்கு உகந்த நேரமா?

சரிவை சந்திக்கும் தங்கம்.. இது முதலீட்டுக்கு உகந்த நேரமா?

தங்கத்தில் முதலீடு

Published: 

20 Nov 2024 12:52 PM

சர்வதேச காரணிகள் காரணமாக மஞ்சள் உலோகமான தங்கம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,000 வரை சரிவை சந்தித்தது. தற்போது மீண்டும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை சரிவை சந்திக்கும் நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு பொதுவான ஓர் கேள்வி எழுகிறது. பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? தங்கத்தின் விலை சரிவுக்கு என்ன காரணம்? முதலீடு எப்படி இருக்க வேண்டும்?  தங்கம் விலை மீண்டும் சரிய வாய்ப்புகள் உள்ளதா? இது பாதுகாப்பான முதலீடா? மேலும், இது தங்கம் வாங்க சரியான தருணமா?

முதலீட்டாளர்களுக்கு ஓர் வாய்ப்பு?

உலகளவில் தங்கம் விலை, சர்வேதச காரணிகளை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், சமீபத்திய சரிவு வலுவான அமெரிக்க டாலருடன் இணைக்கப்படலாம் மற்றும் உலகளாவிய தேவையை குறைக்கலாம்.
முதலீட்டாளர்களுக்கு, தங்கத்தின் விலை வீழ்ச்சி ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எனினும், இதில் நிதானம் அவசியம் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தில் முதலீடு

தங்கம் விலை சரிவு ஏன்?

பணவீக்கம் மற்றும் சந்தை நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக தங்கம் விலைகள் பெரும்பாலும் செயல்படுகின்றன. உலகச் சந்தைகள் நிலைபெறும் போது, ​​தங்கத்தின் தேவை குறையும். இது அதன் விலையை பாதிக்கிறது.

மேலும், வலுவான டாலர் மற்ற நாணயங்களில் வாங்குபவர்களுக்கு தங்கத்தை விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விலையை பாதிக்கிறது.

டெல்லியில் தங்கம் விலை

தேசிய தலைநகரான டெல்லியில், நவம்பர் 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில், 24 காரட் தூயத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80,000 ஆக உயர்ந்து காணப்பட்டது. இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.81,000ஐ தாண்டியது. தற்போது, ​​80,000 ரூபாய்க்கு கீழ் விலை குறைந்து, 76,000 ரூபாயை நெருங்கி வருகிறது.

தங்கத்தில் முதலீடு

பொருளாதார நிபுணர்கள் கருத்து

இதனால், பலரும் தங்கம் வாங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும், திருமணம் உள்ளிட்ட சீசன்களில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பொருளாதார நிபுணர்கள், “பொதுவாக தங்கத்தில் முதலீட்டை ஆன்லைன் மூலமாகவும் தொடரலாம். இது ரிஸ்க்-ஐ குறைக்கும்” என்றனர். மேலும், “முதலீடு என்பது பகிர்வு முறையில் இருக்க வேண்டும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : நீண்ட கால முதலீடுக்கு திட்டமா? 5 ஆண்டுகளில் 38% வரை வளர்ச்சி: இந்தப் ஃபண்டுகளை பாருங்க!

தொடர்ந்து பேசிய பொருளாதார நிபுணர்கள், “எந்தவொரு முதலீட்டாளரும் ஓர் முதலீட்டை மட்டுமே நம்பி முதலீடு செய்யக் கூடாது. ஏதாவது ஓர் முதலீடு சிக்கலை சந்திக்கும் போது மொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
ஆகவே முதலீடு என்பது ஓர் பூக் கூடை போல் இருத்தல் வேண்டும். பூக்கூடையில் பல்வேறு வகையான பூக்கள் இருப்பது போல், தங்கம், பேப்பர் கோல்டு, ஃபிக்ஸட் டெபாசிட் என முதலீட்டை விரிவுப்படுத்த வேண்டும்” என்றனர்.

சென்னையில் இன்று தங்கம்

சென்னையை பொறுத்தவரை 24 காரட் தங்கம் கிராம் ரூ.7620 ஆகவும், 8 கிராம் சவரன் தங்கம் ரூ.60,960 ஆகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,115 ஆகவும், சவரன் 56920 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. நேற்றைய விலையில் தொடர்கிறது. கிராம் ரூ.101 ஆகவும், கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து ஆயிரம் ஆகவும் காணப்படுகிறது.

இதையும் படிங்க : சி.என்.ஜி எரிபொருள் விலை உயர்வு? அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்!

இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!