Aadhaar Card : ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டுமா? UIDAI கூறுவது என்ன? - Tamil News | It is mandatory to update Aadhaar card for every 10 years know the reason and how to update Aadhaar in Tamil | TV9 Tamil

Aadhaar Card : ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டுமா? UIDAI கூறுவது என்ன?

Updated On: 

25 Aug 2024 13:07 PM

Update | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஏன் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும், அதனால் என்ன பயன், என்ன சிக்கல் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம். 

Aadhaar Card : ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டுமா? UIDAI கூறுவது என்ன?

ஆதார் கார்டு

Follow Us On

ஆதார் அப்டேட் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமனக்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஏன் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும், அதனால் என்ன பயன், என்ன சிக்கல் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Card : வீடு மாறிட்டீங்களா.. அப்போ மறக்காம ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க!

ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்

ஆதார் கார்டில் உள்ள பெயர்,முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட முக்கிய தகவல்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அப்டேட் செய்ய வேண்டும் என UIDAI பரிந்துறைக்கிறது. காரணம் இந்த தகவல்கள் மாறிக்கொண்டே இருக்க கூடியவை. அவற்றை அவ்வப்போது அப்டேட் செய்வதன் மூலம் உங்களால் தொடர்ந்து ஆதார் கார்டை பயன்படுத்தி அரசின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்வதன் மூலம் மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதுமட்டுமன்றி ஆதார் கார்டை தொடர்ந்து அப்டேட் செய்வதன் மூலம் வங்கி கணக்கு திறப்பது அல்லது கடனுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட நிதி சார்ந்த சிக்கல்களை தவிர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

  1. அதற்கு முதலில் UIDAI-ன் https://uidai.gov.in/en/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
  3. அப்போது உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும் அதை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  4. இதனை தொடர்ந்து UIDAI தளத்தில் தோன்றும் பக்கத்தில் Address Update என்பதை கிளிக் செய்து அதில் Update Aadhaar Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அதன் பிறகு நீங்கள் அப்டேட் செய்ய வேண்டிய தகவல்களை பதிவிட்டு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் வரவில்லையா.. அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

மேற்கண்ட நடைமுறை பின்பற்றுவதன் மூலம் சுலபமாக ஆதார் கார்டை அப்டேட் செய்துவிடலாம்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version