5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இதுதான்.. அபராதம் மற்றும் கட்டணம் குறித்த முழு தகவல் இதோ!

Last Date for Income Tax | வருமான வரித் துறை வரி செலுத்துவோர் ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிடாமல் இருக்க மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அவ்வப்போது தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜூலை 31 ஆம் தேதி வருமான வரி செலுத்துவதற்கான கடைசி தேதி  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இதுதான்.. அபராதம் மற்றும் கட்டணம் குறித்த முழு தகவல் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 19 Jul 2024 13:55 PM

வருமான வரி : இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.7,25,000-க்கும் வருமானம் ஈட்டுபர்கள் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும். முன்னதாக ரூ.5,00,000-க்கு மேல் ஆண்டு வருமான ஈட்டுபர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில், தற்போது அது ரூ.7,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஆண்டுக்கு ரூ..7,25,000-க்கும் மேல் வருமானம் ஈட்டும் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து அந்த அந்த நிறுவனமே வருமான வரியை பிடித்தம் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கும். ஒருவேளை நீங்கள் சுய தொழில் செய்பவர் அல்லது ஊதியத்தை தாண்டிய வருமானம் ஏதேனும் வருகிறது என்றால் நீங்கள் தான் வருமான வரி செலுத்த வேண்டும். இந்நிலையில் இந்த அண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்

வருமான வரித் துறை வரி செலுத்துவோர், ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிடாமல் இருக்க மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அவ்வப்போது தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜூலை 31 ஆம் தேதி வருமான வரி செலுத்துவதற்கான கடைசி தேதி  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PF Balance : UAN இல்லாமல் பிஎஃப் பேலன்ஸ் செக் பண்ணலாம்.. இந்த சிம்பிள் டிப்ஸ்களை தெரிஞிசிக்கோங்க!

வரி செலுத்துவோர், வரி தணிக்கைக்கு பொறுப்பேற்காத கணக்குகள், முந்தைய நிதியாண்டிற்கான வருமான வரியை ஜூலை 31 வரை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. வரித் தணிக்கையின் கீழ் வரி செலுத்துவோர் அக்டோபர் 31 ஆக் தேதிக்குள் தங்கள் வருமான வரியை தக்கல் செய்யலாம். இதேபோல திருத்தப்பட்ட ரிட்டன் மற்றும் தாமதமான வருமானத்தை தாக்கல் செய்ய டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாமதமாக வரி செலுத்துவதற்கான அபராதம் எவ்வளவு

ரூ.5,00,000 வரை நிகர வரி விதிக்க கூடிய வருமானம் உடையவர்கள், தாமதமாக வரி செலுத்தினால் அதிகபட்சமாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதுவே ரூ.5,00,000-க்கும் அதிகமாக வரி செலுத்துபவர்கள் என்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் வரி செலுத்துபரின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்புக்கு கீழே இருந்தால், வருமான வரி சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்கள் எஃப்.டி.. 8.80% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Latest News