5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Blue Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Update | பள்ளியில் சேறுவது முதல் மருத்துவமனை வரை, அனைத்து இடங்களிலும் முதன்மை ஆதாரமாக ஆதார் கேட்கப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு உள்ளது. அதற்கு பெயர் ப்ளூ ஆதார் கார்டு அல்லது பால்யா ஆதார் கார்டு என அழைக்கப்படுகிறது.

Blue Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 27 Aug 2024 13:04 PM

ப்ளூ ஆதார் கார்டு : ஆதார் எண் ஒரு தனி நபர் அடையாளம் மட்டுமன்றி அத்தியாவசிய தேவையும் ஆகிவிட்டது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆதார் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேறுவது முதல் மருத்துவமனை வரை, அனைத்து இடங்களிலும் முதன்மை ஆதாரமாக ஆதார் கேட்கப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு உள்ளது. அதற்கு பெயர் ப்ளூ ஆதார் கார்டு அல்லது பால்யா ஆதார் கார்டு என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க : Aadhaar | செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!.. ஆதார் குறித்து வெளியான முக்கிய தகவல்!

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டு

கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு குழந்தைகளுக்கான இந்த ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த ப்ளூ ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. குழந்தை பருவத்திலேயே ஆதார் கார்டு வழங்கப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ப்ளூ ஆதார் கார்டை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும், எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ப்ளூ ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்

குழந்தைகள் 5 வயதுக்குள் இருக்கும்போது ப்ளூ ஆதார் கார்டு வழங்கப்படுவதால், அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களது கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் ஆதாரங்கள் மாற்றமடைந்திருக்கும். இதன் காரணமாக குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களது பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது கட்டாயமாகும். அதன்படி, ப்ளூ ஆதார் கார்டை பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் 5 வயதை நிறைவடையும்போதும், 15 வயதை நிறைவடையும்போதும் என இரண்டு முறை புதுப்பிக்க வேண்டும். அதன்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆதார் கார்டுகளை சேவா கேந்திராவில் இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. ஒருவேளை குழந்தைகளின் ப்ளூ ஆதார் கார்டை 5 மற்றும் 15 வயதில் அப்டேட் செய்யவில்லை என்றால் அதற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டுமா? UIDAI கூறுவது என்ன?

ப்ளூ ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. பெற்றோர்கள் 5 வயதுக்குட்பட்ட தங்களின் குழந்தைகளுக்காக ப்ளூ ஆதார் கார்டை விண்ணப்பிக்கலாம்.
  2. இதற்கு பெரிதாக ஆவணங்கள்ம் ஒன்றும் கேட்கப்படாது.
  3. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், அல்லது மருத்துவமனையில் பெற்றோர்கள் பயன்படுத்திய டிஸ்சார்ஜ் சீட்டு ஆகியவற்றை வைத்து விண்ணப்பிக்கலாம்.
  4. ஒருவேளை குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருந்தால், அந்த ஐடி கார்டையும் பயன்படுத்தலாம்.
  5. உரிய ஆவணங்களுடன் UIDAI இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  6. அதில் My Aadhaar என்பதை கிளிக் செய்து, Book an appointment என்பதை கிளிக் செய்யவும்.
  7. New Aadhaar என்பதை தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
  8. பிறகு குழந்தையின் வயது, தேவையான விவரங்களை பதிவிட்டு அருகில் உள்ள ஆதார் சேவா கேந்திராவில் சந்திப்பை பதிவு செய்யவும்.

நீங்கள் உங்கள் குழந்தைக்கு இன்னும் ப்ளூ ஆதார் கார்டு வாங்கவில்லை என்றால் மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News