3 ஆண்டு டெபாசிட்.. 8.05% வட்டி.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
3 Year Fixed deposit interest rates: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.05 சதவீதம் வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இந்த வங்கிகள் மற்றும் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு உயர் வட்டி: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் சான்றளிக்கப்பட்ட வட்டியை வழங்குவதால் அனைத்து வயது முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். மேலும், சில குறிப்பிட்ட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் வரி சேமிப்பையும் வழங்குகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் அச்சமின்றி தங்களின் முதலீட்டை தொடங்குகின்றனர். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை பொறுத்தவரை அனைத்து வகையான திட்டங்களுக்கும் வரி விலக்கு கிடையாது. இதனை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரையில் நாம் பல்வேறு வங்கிகள் வழங்கும் 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். மேலும், இந்த வட்டி விகிதங்கள் மூத்தக் குடிமக்களுக்கு மட்டும் பொருந்தும்.
சாதாரண பொதுக் குடிமக்களுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தாது. வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு சென்று வட்டி விகிதங்களை அறிந்துக் கொள்ளலாம்.
இங்கு வங்கிகளின் 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் (சீனியர் சிட்டிசன்கள்) வட்டி விகிதங்கள் இங்குள்ளன.
- யெஸ் வங்கி 8.00%
- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 7.00%
- செளத் இந்தியன் வங்கி 7.20%
- எஸ்.பி.எம் வங்கி இந்தியா 7.80%
- ஆர்.பி.எல் வங்கி 8.00%
- கோடக் மகிந்திரா வங்கி 7.60%
- கர்நாடகா வங்கி 7.00%
- கரூர் வைஸ்யா வங்கி 7.40%
- ஜம்மு காஷ்மீர் வங்கி 7.25%
- இண்டஸ்இந்த் வங்கி 7.75%
- சி.எஸ்.பி வங்கி 6.25%
- டி.சி.பி வங்கி 8.05%
- ஃபெடரல் வங்கி 7.50%
- ஹெச்.டி.எஃப்.சி வங்கி 7.50%
- ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 7.50%
- ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி 7.30%
தொடர்ந்து, பொதுத்துறை வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
- கனரா வங்கி 7.90%
- சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.25%
- பேங்க் ஆஃப் பரோடா 7.65%
- பேங்க் ஆஃப் இந்தியா 7.25%
- இந்தியன் வங்கி 6.75%
- இந்தியன் ஒவர்சீஸ் வங்கி 7.00%
- பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 6.50%
- பஞ்சாப் நேஷனல் வங்கி 7.50%
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7.26%
வரி விலக்கு
இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களில் இண்டஸ்இந்த் வங்கி மட்டும் மூத்தக் குடிமக்களுக்கு வரி விலக்கு சலுகையை வழங்குகிறது.
அந்த வங்கியின் இணையதளத்தில், “வருமான வரிச் சட்டம் 1961ன் படி 80சி முதலீடுக்கு ரூ.1,50,000 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்பட்ச வட்டி விகிதம் என வரும் போது, தனியார் வங்கியான டி.சி.பி வங்கி 3 ஆண்டு மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்குகிறது.
எஸ்.பி.ஐ வரி விலக்கு எஃப்.டி
பொதுத்துறை வங்கிகளை பொறுத்தமட்டில் சில குறிப்பிட்ட காலக்கெடு கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீம்களுக்கு மட்டும் வரி விலக்கு என்ற சலுகையை வழங்குகின்றன. இது வங்கிக்கு வங்கி மாறுபடும். எஸ்.பி.ஐ வங்கியை பொறுத்தவரை 5 ஆண்டு எஃப்.டி-க்கு இந்த சலுகை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 444 நாள்கள் டெபாசிட், 8.10% வட்டி.. SBI உள்பட எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?