5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

15 ஆண்டுகளாக பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?

SBI Mutual Funds : எஸ்.பி.ஐ டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன. இந்தத் திட்டங்கள் ஆண்டுக்கு 23 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன. இதில் டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

15 ஆண்டுகளாக பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 15 Nov 2024 19:05 PM

SBI Mutual Funds : மியூச்சுவல் ஃபண்ட் என்பது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி, பங்குகள், பத்திரங்கள் மற்றும் குறுகிய காலக் கடன் போன்ற பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்வது ஆகும். இதில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்கள் சிறந்த செயல்திறன் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என அறியப்படுகின்றன. ஏனெனில், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட காலத்துக்கு மார்க்கெட்டில் தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை கொடுத்துள்ளன.

இந்தக் கட்டுரையில் டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டங்கள் ஆண்டுக்கு 23 சதவீதம் வரை வருவாய் அளித்துள்ளன. இந்த வரிசையில் எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் ஃபண்டு முதலிடத்தில் உள்ளது.

எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் ஃபண்டு

எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் கடந்த 15 ஆண்டுகளில் 23.29 சதவீத வருடாந்திர எஸ்.ஐ.பி வருமானத்தை அளித்துள்ளது. இந்தப் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ. 178.3251 ஆகவும், நிர்வாகத்தின் கீழ் (AUM) உள்ள சொத்து ரூ.33,107 கோடி ஆகும். இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 ஆகும். மொத்த தொகை மூதலீடு ரூ.5 ஆயிரம் ஆகும்.
மேலும் இத்திட்டத்தில் ரூ.14 லட்சத்து 99 ஆயிரத்து 940 முதலீடு ரூ.1 கோடியே 6 லட்சத்து 51 ஆயிரத்து 565 ஆக வளர்ந்துள்ளது. அதாவது, மாதம் ரூ.8,333 மாதாந்திர எஸ்.ஐ.பி முதலீடு 15 ஆண்டுகளில் ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: SIP முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வம். அக்டோபர் மாதம் புதிய சாதனை!

எஸ்.பி.ஐ மேக்னம் ஃபண்டு

எஸ்.பி.ஐ மேக்னம் ஃபண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் 19.42 சதவீதம் வருவாய் கொடுத்துள்ளது. இந்தப் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.21,407 கோடியாகவும், மொத்த சொத்து மதிப்பு ரூ.236.3409 கோடியாகவும் உள்ளது.
மேலும் இந்தப் ஃபண்டின் செலவு விகிதம் 1.90 சதவீதமாகவும் உள்ளது. ஃபண்டில் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 ஆகவும், குறைந்தப்பட்ச மொத்த முதலீடு ரூ.5 ஆயிரமாகவும் உள்ளது. இதில் ரூ.8,333 மாதாந்திர முதலீடு 15 ஆண்டுகளில் ரூ.73 லட்சமாக உயர்ந்திருக்கும்.

எஸ்.பி.ஐ ஹெல்த்கேர் ஆபர்டியூனிடிஸ் ஃபண்டு

மூன்றாம் இடத்தில் உள்ள இந்தப் ஃபண்டு கடந்த 15 ஆண்டுகளில் 18.25 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. ஃபண்டின் செலவினம் 1.95 சதவீதம் ஆக உள்ளது. மேலும், ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.3,416 கோடியாகும். இதில் எஸ்.ஐ.பி-யாக ரூ.500ம், மொத்தமாக மூதலீடு செய்ய ரூ.5 ஆயிரமும் குறைந்தப்பட்ச தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ காண்ட்ரா ஃபண்டு

எஸ்.பி.ஐ காண்ட்ரா ஃபண்டு கடந்த 15 ஆண்டுகளில் 17.66 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இதன் செலவின விகிதம் 1.51 சதவீதம் ஆகும். ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.40,486 கோடியாக உள்ளது.
இதில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி.யாக ரூ.8333 முதலீடு செய்திருந்தால் 15 ஆண்டுகளில் ரூ.64 லட்சம் வரை ரிட்டன் கிடைத்திருக்கும். ஆண்டின் அடிப்படையில் கணக்கீடும் போது இந்தப் ஃபண்டு 19.75 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.

எஸ்.பி.ஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டு

எஸ்.பி.ஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டு கடந்த 15 ஆண்டுகளில் 17.15 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. இதன் ஆண்டு முதலீட்டாளர் வருவாய் 17.28 சதவீதம் ஆகும். இந்தப் ஃபண்டின் செலவின விகிதம் 1.59 சதவீதம் ஆக உள்ளது.
ஃபண்டின் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீடு ரூ.500 ஆகும். இந்தப் ஃபண்டில் ரூ.8,333 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.61 லட்சமாக உயர்ந்திருக்கும்.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.

இதையும் படிங்க: ஓராண்டில் 56% ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்டை நோட் பண்ணுங்க!

Latest News