5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

Last Date | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 23 Sep 2024 23:57 PM

ரேஷன் அட்டை தாரர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரேஷன் அட்டை தார்ரகள் ஒவ்வொருவரும் டிஜிட்டல் கெஒய்சி செய்யவில்லை என்றால், பொருட்கள் வழங்கப்படாது என்ற நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டை தார்ரகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் அட்டை தார்ரகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ள செய்தி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!

அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கும் ரேஷன் கடைகள்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ரேஷன் கார்டு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?

குற்ற சம்பவங்களை தடுக்க கட்டாயமாக்கப்பட்ட டிஜிட்டல் KYC

பொருளாதாரத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் பயனடையும் வகையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கார்டுகளை வைத்து பல்வேறு மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஒருவர் இரண்டு குடும்ப அட்டைகளை பயன்படுத்துவது, ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றை தடுக்கும் வகையிலும் அரசின் சலுகைகள் உரிய நபர்களிடம் சென்றடையும் வகையில் ரேஷன் கார்டுகளுக்கு டிஜிட்டல் KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Supreme Court: சிறை டூ அபராதம்.. சிறார்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

டிஜிட்டல் KYC செய்ய கால அவகாசம் நீடிப்பு

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுகளுக்கு டிஜிட்டல் KYC செய்ய வேண்டும் இல்லை என்றால் இலவச ரேஷன் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைகளுக்கு டிஜிட்டல் KYC செய்வதற்கான கால அவகாசம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Lebanon Attack: சர்வ நாசம்.. 182 பேர் மரணம்.. லெபனானை நிலைகுலைய வைத்த இஸ்ரேல்!

இலவச பொருட்கள் வாங்குவதற்கு தடை இல்லை

எனவே, ரேஷன் அட்டை தாரர்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை டிஜிட்டல் KYC செய்துக்கொள்ளலாம். அதுவரை ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வாங்க எந்த தடையும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News