5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

Private Banks | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
மாதிரி புகைப்படம் (Picture Credit : Getty )
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Sep 2024 12:44 PM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 தனியார் துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Income Tax : 2024-ல் அதிக வருமான வரி செலுத்திய இந்திய நடிகர்கள்.. 2வது இடம் பிடித்த நடிகர் விஜய்.. முதல் இடம் யாருக்கு?

ஆக்சிஸ் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஆக்சிஸ் வங்கி வங்கி அதிகபட்சமாக 7.2% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கி வருகிறது.

பந்தன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பந்தன் வங்கி அதிகபட்சமாக8% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்கி வருகிறது.

சிட்டி யூனியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிட்டி யூனியன் வங்கி அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7% வட்டி வழங்கி வருகிறது.

சிஎஸ்பி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிஎஸ்பி வங்கி அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 5% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : ரேஷன் பொருள் வாங்க ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பித்தல் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்!

டிஎஸ்பி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிஎஸ்பி வங்கி  அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7% வட்டி வழங்கி வருகிறது.

டிசிபி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிசிபி வங்கி அதிகபட்சமாக 8.05% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கி வருகிறது.

பெடரல் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பெடரல் வங்கி அதிகபட்சமாக 7.4% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.8% வட்டி வழங்கி வருகிறது.

எச்.டி.எஃப்.சி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி அதிகபட்சமாக 7.4% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.6% வட்டி வழங்கி வருகிறது.

ஐசிஐசிஐ வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் கார்டில் இத்தனை வகைகள் இருக்கிறதா? உங்கள் கார்டு எந்த வகை என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க்

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க்  அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.5% வட்டி வழங்கி வருகிறது.

Latest News