5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 1 ஆண்டுக்கான FD திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

1 Year Scheme | நிலையான வைப்புநிதி திட்டங்கள் 1 முதல் 5 ஆண்டுகள் வரை உள்ளன. அதில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு விதமான வட்டி வழங்கப்படும். அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி, 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி மற்றும் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு நல்ல வட்டி வழங்கப்படுகிறது.

Fixed Deposit : 1 ஆண்டுக்கான FD திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!
கோப்பு புகைப்படம் (Photo Credit : David Talukdar/Moment/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 04 Sep 2024 11:52 AM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 சிறிய நிதி நிறுவன வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்கி வருகிறது.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.5% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : FD-களுக்கு 8.05% வரை வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (ESAF Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6% வட்டி வழங்கி வருகிறது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.25% வட்டி வழங்கி வருகிறது.

நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7% வட்டி வழங்கி வருகிறது.

சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.65% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.85% வட்டி வழங்கி வருகிறது.

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.25% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : Richest Man of Asia : அதானி Vs அம்பானி.. ஆசியாவின் முதல் பணக்காரர் யார்.. ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்ன?

யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.85% வட்டி வழங்கி வருகிறது.

உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8% வட்டி வழங்கி வருகிறது.

Latest News