Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி.. 7.15% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!
Interest Rate | பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.
நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 பொதுத் துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : GST Council : ரூ.2,000 டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி?.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து வெளியான தகவல்!
பேங்க் ஆஃப் பரோடா
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7.15% வரை வட்டி வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் இந்தியா 7.3% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வரை வட்டி வழங்குகிறது.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வரை வட்டி வழங்குகிறது.
கனரா வங்கி
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு கனரா வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.8% வரை வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.55% வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.45% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.75% வரை வட்டி வழங்குகிறது.
இந்தியன் வங்கி
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்தியன் வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.1% வரை வட்டி வழங்குகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 7.3% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.25% வரை வட்டி வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்ஜி
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்ஜி 7.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.5% வரை வட்டி வழங்குகிறது.
பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 7.3% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 7% வரை வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : Aadhaar Card : இன்னும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க!
இந்திய ஸ்டேட் வங்கி
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்திய ஸ்டேட் வங்கி 7.2% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6% வரை வட்டி வழங்குகிறது.
இந்திய யூனியன் வங்கி
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இந்திய யூனியன் வங்கி 7.4% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 3 ஆண்டுக்ளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வங்கி 6.7% வரை வட்டி வழங்குகிறது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.