5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.55% வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

Highest Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.55% வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Unsplash)
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 09 Sep 2024 14:16 PM

நிலையான வைப்புநிதி திட்டம் : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் தனியார் துறை நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 6.9% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

ஆக்சிஸ் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஆக்சிஸ் வங்கி வங்கி அதிகபட்சமாக 7.2% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கி வருகிறது.

பந்தன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பந்தன் வங்கி அதிகபட்சமாக 8% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்கி வருகிறது.

சிட்டி யூனியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிட்டி யூனியன் வங்கி அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.5% வட்டி வழங்கி வருகிறது.

சிஎஸ்பி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிஎஸ்பி வங்கி அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 5.75% வட்டி வழங்கி வருகிறது.

டிஎஸ்பி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிஎஸ்பி வங்கி  அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.5% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : ITR Refund : வருமான வரி Refund Request எப்படி அனுப்பனும்னு தெரியுமா?.. இத படிங்க!

டிசிபி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிசிபி வங்கி அதிகபட்சமாக 8.05% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.55% வட்டி வழங்கி வருகிறது.

பெடரல் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பெடரல் வங்கி அதிகபட்சமாக 7.4% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7% வட்டி வழங்கி வருகிறது.

எச்.டி.எஃப்.சி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி அதிகபட்சமாக 7.4% வட்டி வழங்குகிறது.அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

ஐசிஐசிஐ வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7% வட்டி வழங்கி வருகிறது.

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க்

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க்  அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்கி வருகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News