5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amazon Prime Day : ஸ்மார்ட்போன்கள் முதல் டிவி வரை.. அசத்தலான தள்ளுபடிகளை வழங்கும் அமேசான்.. 2 நாட்களுக்கு மட்டுமே!

Best Deals on Amazon Prime Day | இந்த பிரைம் டே விற்பனையில் டாப் பிராண்டுகள் முதல் சிறிய பொருட்கள் வரை பயனர்கள் சிறப்பான தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்போன்கள், அழகு சாதன பொருட்கள், மின்சாதன பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 

Amazon Prime Day : ஸ்மார்ட்போன்கள் முதல் டிவி வரை.. அசத்தலான தள்ளுபடிகளை வழங்கும் அமேசான்.. 2 நாட்களுக்கு மட்டுமே!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 20 Jul 2024 11:27 AM

அமேசான் பிரைம் டே : இந்தியாவின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது பிரைம் டேவை அறிவித்துள்ளது. அதன்படி இன்றும், நாளையும் அமேசானில் பிரைம் டே விற்பனை நடைபெறும். இந்த இரண்டு நாட்களும் மொபைல் போன் உள்ளிட்ட பல மின்சாதன பொருட்கள் விலை குறைவாகவும், பல தள்ளுபடிகளுடனும் கிடைக்கும். அதுமட்டுமன்றி குறிப்பிட்ட வங்கிகளை பயன்படுத்துபவர்களுக்கும் இந்த பிரைம் டேவில் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமேசானில் என்ன என்ன பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில் பிரைம் மெம்பர்களுக்கு கூடுதல் சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது. அமேசான் 2024 பிரைம் டே அசத்தலான தள்ளுபடி மற்றும் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பிரைம் டே விற்பனையில் டாப் பிராண்டுகள் முதல் சிறிய பொருட்கள் வரை பயனர்கள் சிறப்பான தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்போன்கள், அழகு சாதன பொருட்கள், மின்சாதன பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஸ்மார்ட்போனக்ளுக்கான சிறந்த சலுகைகள்

  • ஐபோன் 13 இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.47,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.74,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வங்கி சலுகை மற்றும் 12 மாதங்கள் வரை No cost EMI சலுகையும் வழங்கப்படுகிறது.
  • சாம்சங்க் கேலக்சி எஸ்21 எஃப்இ 5ஜி வெறும் ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வங்கி சலுகைகளுடன் 6 மாதங்கள் வரை No cost EMI சலுகையும் வழங்கப்படுகிறது.
  • ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. வங்கி சலுகைகள், 12 மாதங்கள் வரை No cost EMI வழங்குவதுடன் மொபைல் போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.12,000 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமேசான் பிரைம் டேவில் கிடைக்கும் மேலும் சில சலுகைகள்

  • லேப்டாப்களுக்கு ரூ.45,000 வரை சலுகை வழங்கப்படுகிறது.
  • டேப்லெட்களுக்கு சுமார் 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கேமரா மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு சுமார் 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஒலிபெருக்கிகளுக்கு சுமார் 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கம்ப்யூட்டர் சாதனங்களுக்கு சுமார் 75% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Paytm : அதிரடியாக உயர்ந்த Paytm நிறுவனத்தின் வருவாய்.. காரணம் இதுதான்!

டிவி மற்றும் இதற பொருட்களுக்கான சலுகைகள் என்ன?

  • சாம்சங், சோனி, எல்,ஜி உள்ளிட்ட தொலைக்காட்சிகளுக்கு சுமார் 65% வரை தள்ளுபடி வழங்கப்படுகிற்து.
  • ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது.
  • வாஷிங் மெஷின்களுக்கு சுமர் 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • குளிர்சாதன பெட்டிகளுக்கு சுமார் 55% தள்ளுபடியும், ரூ.17,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது.
  • ஏசிக்கு சுமார் 55% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • சமையல் அறை பொருட்களுக்கு சுமார் 65% வரை தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News