5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உயரப்போகும் மேகி நூடுல்ஸ் விலை.. சுவிட்சர்லாந்து எடுத்த திடீர் முடிவு.. திணறும் இந்தியா!

Maggi Noodles : நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸின் விலை ஜனவரி 1ஆம் தேதி முதல் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. விருப்ப பட்டியலில் இருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கிய நிலையில், மேகி நூடுல்ஸின் விலை உயரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

உயரப்போகும் மேகி நூடுல்ஸ் விலை.. சுவிட்சர்லாந்து எடுத்த திடீர் முடிவு.. திணறும் இந்தியா!
மேகி நூடுல்ஸ் (picture credit : Pinterest)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Dec 2024 16:13 PM

மேகி நூடுல்ஸின் விலை ஜனவரி 1ஆம் தேதி முதல் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடியது மேகி நூடுல்ஸ். இதை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்பட்டாலும், பலரும் இதை இன்று வரை விரும்பிக் சாப்பிட்டு வருகின்றனர்.   குறிப்பாக ஈஸியாகவும் விரைவாகவும் சமைக்க முடியும் என்பதால் இதனை பலரும்  வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் தான் தற்போது மேகி நூடுல்ஸின் விலை ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதற்கு காரணம் என்ன போன்ற விவரங்களை பார்ப்போம்.

உயரப்போகும் மேகி நூடுல்ஸ் விலை

சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்த ரீதியான உறவில் இருந்து வருகிறது. இந்திய நிறுவனங்களுக்கு சுவிட்சர்லாந்தில் வர்த்தம் செய்து வருகின்றன. இதனால் இந்தியா விருப்ப நாடு பட்டியலில் இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு 10 சதவீத வரி என்றால், விருப்ப பட்டியலில் இருக்கும் இந்தியாவிற்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.

இந்த விருப்ப பட்டியலில் இருந்து தான் இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கி உள்ளது. இது 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் சுவிட்சர்லாந்தில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளை போல 10 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸின் விலை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. அதாவது, சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக நெஸ்லே உள்ளது. இந்த நிறுவனம் ஏகப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்று மேகி நூடுல்ஸ். இந்த மேகி நூடுல்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also Read : 2025-ல் தங்கம் விலை குறையலாம்.. உலக தங்க கவுன்சில் கணிப்பு!

இந்தியா-சுவிட்சர்லாந்துக்கு என்ன பிரச்னை?

இதற்கு வரியாக இந்தியா 5 சதவீதம் மட்டுமே செலுத்தி வந்தது. ஏனென்றால் விருப்ப நாடுகளில் பட்டியலில் இந்தியா இருந்ததால் 5 சதவீத வரி மட்டுமே இந்தியா செலுத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது விருப்ப நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியதை அடுத்து, 10 சதவீத வரி செலுத்தி வேண்டியிருக்கும்.

ஜனவரி 1ஆம் தேதி வரை 10 சதவீத வரியை இந்திய செலுத்த வேண்டும். இதனால் நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் விலை உயரக்கூடும். தற்போது ஒரு பாக்கெட் மேகி நூடுல்ஸ் விலை 14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வருங் காலங்களில் ரூ.18 முதல் ரூ.20 வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்தியா-சுவிட்சர்லாந்து இரட்டை வரி விதிப்பு (Double Taxation Avoidance Agreement) 1994ல் கொண்டு வரப்பட்டது. பின்னர், 2000 மற்றும் 2010ஆம் ஆண்டில் இரட்டை வரி விதிப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தை இந்தியா-சுவிட்சர்லாந்து மேற்கொண்டது.

Also Read : விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்.. ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவித்த ஆர்பிஐ!

இந்த ஒப்பந்ததத்தின்படி, இந்தியா குறைந்த வரிகளை மட்டுமே செலுத்தி வந்தது. அதாவது மற்ற நாடுகள் 10 சதவீத வரி செலுத்தினால், இந்தியா 5 சதவீதம் மட்டும் செலுத்தியது. இந்த நிலையில் தான் இந்த ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்த தற்போது இடைநிறுத்தம் செய்துள்ளது. இதுகுறித்து சுவிசர்லாந்து வெளியிட்ட அறிவிப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விருப்ப பட்டியலில் இருக்கும் நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தால் விருப்ப பட்டியலில் சம்பந்தப்பட்ட நாடுகள் நீக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

முன்னதாக இந்தியா லித்துவேனியா மற்றும் கொலம்பியாவுடன் வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த இரு நாடுகளும் பின்னர் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது. மேலும், இந்தியாவும் இந்த அமைப்பில் சேர்ந்ததாக தெரிகிறது. இதனால், மிகவும் சாதகமான நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News