Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா? - Tamil News | Mahatma Gandhi was not the first choice of Indian Currency, do you know what was the first selection | TV9 Tamil

Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

Published: 

02 Oct 2024 13:26 PM

Mahatma Gandhi | கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரூபாய் நோட்டுகள் நிறம், வடிவம் ஆகியவற்றில் மாற்றமடைந்தாலும் அதில் மாற்றமே செய்யப்படாத ஒன்று காந்தியின் புகைப்படம். ரூபாய் நோட்டுகள் என்றாலே காந்தியின் புகைப்படம் தான் நமது கண் முன்பு தோன்றும். அந்த அளவிற்கு காந்திக்கும், ரூபாய் நோட்டுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது.

Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

இந்திய ரூபாய்

Follow Us On

மனிதர்கள் உயிர் வாழ உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்டவை எவ்வளவு முக்கியோ அந்த அளவிற்கு பணமும் முக்கியம். பணம் தான் ஒருவரின் பொருளாதார நிலையை தீர்மானிக்கிறது. இத்தகைய மதிப்பு மிக்க மற்றும் சக்தி வாய்ந்த பணத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். தேசத்திற்காக அவர் ஆற்றிய தொண்டுகளையும், தியாகங்களையும் பெருமைப்படுத்தும் விதமாக காந்தியின் புகைப்படம் ரூபாய் நோட்டுகளில் பதியப்பட்டிருக்கும். ஆனால், ரூபாய் நோட்டுகளில் பதிவதற்கு மகாத்மா காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?.

இதையும் படிங்க : Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

ரூபாய் நோட்டில் காந்தியின் புகைப்படம்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரூபாய் நோட்டுகள் நிறம், வடிவம் ஆகியவற்றில் மாற்றமடைந்தாலும் அதில் மாற்றமே செய்யப்படாத ஒன்று காந்தியின் புகைப்படம். ரூபாய் நோட்டுகள் என்றாலே காந்தியின் புகைப்படம் தான் நமது கண் முன்பு தோன்றும். அந்த அளவிற்கு காந்திக்கும், ரூபாய் நோட்டுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. ஆனால், ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம் இல்லாமல் உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?. முடியாது, கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம் தான் அச்சிடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

முதல் 1 ரூபாய் நோட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி

கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, புதிய இந்திய ரூபாய் நோட்டுக்களை வடிவமைக்கும் பொறுப்பு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 14, 1947 ஆம் ஆண்டு நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு தான் இந்தியா குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் ரிசர்வ் வங்கி ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டு வந்தது. இதற்கு இடையில் தான் கடந்த 1949 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதல் 1 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அப்போது சுதந்திர இந்தியாவின் சின்னங்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அப்போது, முதலில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறுதியாக சாரநாத் லயன் கேப்பிடல் காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Ration Shop : இனி வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.. எல்லாமே ரேஷன் கடையில் வரப்போகுது.. அரசின் அதிரடி திட்டம்!

இந்தியாவின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் சின்னங்கள்

அதனை தொடர்ந்து 1950-கள் மற்றும் 60-களில் புலிகள் மற்றும் மான்கள் போன்ற கம்பீரமான விலங்குகளின் படங்கள், ஹிராகுட் அணை மற்றும் ஆர்யபட்டா செயற்கைக்கோள் போன்ற தொழில்துறை முன்னேற்றத்தின் சின்னங்கள் மற்றும் பிரகதீஸ்வரர் கோயில் போன்றவை இடம்பெற்றன. இந்த வடிவமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் மற்றும் அதன் கலாச்சார பாரம்பரியத்தில் புதிய கவனம் செலுத்துவதை பிரதிபலிக்கிறது.

இதையும் படிங்க : Bank Holiday : அக்டோபர் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. முழு விவரம் இதோ!

காந்தியின் நூற்றாண்டு விழாவின் போது ரூபாய் நோட்டில் இடம் பெற்ற புகைப்படம்

அப்போதுதான், கடந்த 1969 ஆம் ஆண்டு காந்தியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் முதன்முறையாக ரூபாய் நோட்டில் காந்தியின் உருவம் இடம்பெற்றது. அந்த ரூபாய் நோட்டில் காந்தி அமர்ந்திருக்கும் நிலையில், அவருக்கு பின்னால் அவரது சேவகிராம் ஆசிரமம் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசு ரூ.500 நோட்டை அறிமுகப்படுத்தியபோது அதில் காந்தியின் உருவம் இடம்பெற்றது என்று ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version