India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை! - Tamil News | Maldives president Mohamed Muizz introduced Indian UPI system to his country | TV9 Tamil

India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!

Maldives | இந்தியாவில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ பண பரிவர்த்தனை செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய காய்கறி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை உள்ளதால் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவைக்கு மாறிவிட்டனர். சொல்லபோனால் இப்போதெல்லாம் யாரும் கையில் காசு வைத்துக்கொள்வதில்லை.

Indias UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!

கோப்பு புகைப்படம்

Published: 

22 Oct 2024 12:22 PM

இந்தியாவின் யுபிஐ சேவை, நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையான யுபிஐ வசதி, மத்திய அரசின் உதவியுடன் மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாலத்தீவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டு அதிபர் முய்சு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறபப்டுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் யுபிஐ சேவை மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Correction : திருமணத்திற்கு பிறகு ஆதாரில் குடும்ப பெயரை நீக்குவது எப்படி.. முழு விவரம் இதோ!

இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் வரை சென்றடைந்த யுபிஐ

இந்தியாவில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ பண பரிவர்த்தனை செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய காய்கறி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை உள்ளதால் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவைக்கு மாறிவிட்டனர். சொல்லபோனால் இப்போதெல்லாம் யாரும் கையில் காசு வைத்துக்கொள்வதில்லை. எல்லாமே யுபிஐ தான். மொபைல் போன்களின் வளர்ச்சியால் யுபிஐ இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை மேலும் விரிவடைய செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இந்தியாவின் யுபிஐ சேவை நாடு கடந்து விரிவடைந்துள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

ஏற்கனவே 5 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் யுபிஐ சேவை

கடந்த ஆகஸ்ட் மாதம் யுபிஐ தொடர்பாக இந்தியா – மாலத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து தற்போது மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் யுபிஐ சேவை சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பூடான் உள்ளிட்ட 5 உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய ஆக்சிஸ் வங்கி!

இந்தியாவின் யுபிஐ சேவை மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

இந்தியாவின் யுபிஐ சேவை மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, அது குறித்து மாலத்தீவு அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் யுபிஐ சேவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவின் இந்த யுபிஐ சேவை மூலம் விரைவான பண பரிவர்த்தனை, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளிட்டவை சாத்தியமாகும் என தாங்கள் நம்புவதாகவும் அந்த செய்தி குறிப்பில் மாலத்தீவு அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Karan Johar : கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்.. 50% பங்குகளை ரூ.1,000 கோடிக்கு வாங்கும் ஆதார் பூனவல்லா!

உலக அளவில் அங்கீகாரம் பெறும் இந்தியாவின் யுபிஐ

இந்தியாவின் இந்த யுபிஐ வசதி மூலம் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் கடைக்கோடி கிராமங்கள் வரை, யுபிஐ சென்றடைந்துள்ளது. இந்த நிலையில், மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்தியாவின் யுபிஐ சேவை உலக அளவில் அங்கீகரிக்கப்படும் விதமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யுபிஐ சேவைகளில் பயனர்களின் வசதிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?