5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

Millionaire | இதேபோல 2024 ஆம் ஆண்டுக்கான ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி, ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் ஆசியாவின் முதல் பணக்காரராக வளம் வந்த முகேஷ் அம்பானியை கவுதம் அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!
மார்க் ஜூக்கர்பெர்க்
vinalin
Vinalin Sweety | Published: 01 Oct 2024 23:17 PM

வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், உலகின் 4வது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார். மார்க் ஜூக்கர்பெர்கின் இந்த அசுர வளர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. இந்த நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்தது எப்படி, அவரது தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு மற்றும் அவருக்கு முன்பு இருக்கும் அந்த 3 பணக்காரர்கள் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்த ஜூக்கர்பெர்க்

உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை புளும்பெர்க் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவலின் படி, உலகின் 4வது மிகப்பெரிய பணக்காரராக மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேறியுள்ளார். 4வது இடத்தை பிடித்திருக்கும் மார்கின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 201 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ration Shop : இனி வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.. எல்லாமே ரேஷன் கடையில் வரப்போகுது.. அரசின் அதிரடி திட்டம்!

9 மாதங்களில் 60 சதவீதம் உயர்ந்த மார்க்கின் சொத்து மதிப்பு

மார்க் ஜூக்கர்பெர்க்கின் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வரலாறு காணாத லாபத்தை ஈட்டியுள்ளது. அதாவது, கடந்த 9 மாதங்களில் மார்க்கின் சொத்து மதிப்பு சுமார் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மார்க்கின் சொத்து மதிப்பு வெறும் 9 மாதங்களில் 560 அமெரிக்க டாலர்கள் வரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : அஞ்சலக FD.. ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. தெரிஞ்சிக்கோங்க!

73.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக பெற்ற மார்க்

மொத்தம் சுமார் 201 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மார்க் 4வது இடம் பிடித்துள்ள நிலையில், பல உலக பணக்காரர்களை மார்க் பின்னுக்கு தள்ளியுள்ளார். அதன்படி, ஓரக்கல் இணை நிறுவனர் லேரி எலிக்சன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஆக பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரை விட மர்க் ஜூக்கர்பெர்க் அதிக அளவு வருமானம் ஈட்டியுள்ளார். அதாவது சுமார் 73.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

ஆசியாவில் முதல் இடம் பிடித்த அதானி

இதேபோல 2024 ஆம் ஆண்டுக்கான ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி, ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் ஆசியாவின் முதல் பணக்காரராக வளம் வந்த முகேஷ் அம்பானியை கவுதம் அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுதம் அதானி முதல் இடம் பிடித்துள்ள நிலையில், ரூ.10.14 கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 2வது இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!

இந்த பட்டியலில் உள்ள தரவரிசைக் கணக்கீடுகள் அனைத்தும் 2024 ஜூலை 31 செல்வத்தை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டவை என்று ஹுருன் இந்தியாவின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான அனஸ் ரஹ்மான் ஜூனைத் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில், சீனாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை சுமார் 25% வரை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் அந்த எண்ணிக்கை சுமார் 29% அதிகரித்து 334 பில்லியனர்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News