5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் வரவில்லையா.. அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Income Tax | வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பை அடுத்து, பெரும்பாலானோர் வருமான வரி செலுத்தி முடித்தனர். தற்போது, வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருமான வரி செலுத்தியவர்கள் பலருக்கு இன்னும் ஏன் ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் வரவில்லையா.. அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 24 Aug 2024 11:15 AM

வருமான வரி திரும்ப பெறுதல் : இந்தியாவில் குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படும். அதன்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்றும் வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பை அடுத்து, பெரும்பாலானோர் வருமான வரி செலுத்தி முடித்தனர். தற்போது, வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருமான வரி செலுத்தியவர்கள் பலருக்கு இன்னும் ஏன் ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

சுமார் 26.29% வருமான வரி தாக்கல்கள் இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை

தகவலின்படி, 2023 – 24 ஆம் ஆண்டுக்கான சுமார் 7,13,00,901 வருமான வரி தாக்கல்கள் சரிபார்க்கப்பட்டு அதில் சுமார் 5,25,53,097 செயலாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சுமார் 1,87,47,804 வருமான வரித்துறைகள் இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை. அதாவது இந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வருமான வரி தாக்கல்களில் சுமார் 26.29% வருமான வரி தாக்கல்கள் செயலாக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காதவர்கள் இந்த 26.29% கூட இருக்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit Interest Rate : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கு வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இந்த முறை வருமான வரித்துறை வழகத்தை விட அதிக தொழில்நுட்பத்தை ITR சரிபார்ப்பில் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. வருமான வரித்துறை, வருமான வரி தாக்கல்களை ஆடோஒமேடிக் முறையில் டிஜிட்டலாக பிராசஸ் செய்து வருகிறது. இந்நிலையில், முறைகேடுகளை தடுக்கும் விதமாக சரிபார்ப்பு முறையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. இருப்பினும் பல இடங்களில் மனித தலையிடல்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக வருமான வரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. எனவே ஆகஸ்ட் இறுதிக்குள் மீதமுள்ள 26.29% வருமான வரி தாக்கல்கள் சரிபார்த்து ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News