MSSC : 7.5% வட்டி.. பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி.. முழு விவரம் இதோ! - Tamil News | MSSC providing better interest rate and better income for women within 2 years | TV9 Tamil

MSSC : 7.5% வட்டி.. பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

Small Savings | மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் (MSSC) என்பது, பெண்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரத்யேக திட்டமாகும். பெண்கள் பொருளாதாரா ரீதியாக வலுவாக இருக்கவும், அவர்களிடம் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். 

MSSC : 7.5% வட்டி.. பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

14 Oct 2024 12:41 PM

பொதுமக்களின் தேவை மற்றும் சேமிப்புக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான சேமிப்பு திட்டங்கள் அதிகம். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் ( Mahila Samman Savings Certificate – MSSC ). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்களுக்கு சிறந்த வட்டியுடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்வது, அதன் வட்டி விகிதம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) என்பது, பெண்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரத்யேக திட்டமாகும். பெண்கள் பொருளாதாரா ரீதியாக வலுவாக இருக்கவும், அவர்களிடம் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

MSSC திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விதிகள் என்ன?

  • மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஆண்கள் முதலீடு செய்ய முடியாது.
  • இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  • இந்த திட்டத்தில் பெண்கள் ரூ.2 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
  • இந்த திட்டத்தில் பெண்கள் வெறும் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
  • இந்த திட்டத்தில் கணக்கு திறந்தெ பெண் திடீரென உயிரிழந்துவிட்டால், டெபாசிட் பணம் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
  • திட்டத்தில் கணக்கை தொடங்கிய பெண்ணுக்கு உயிருக்கு ஆபத்தான நோய்கள் எதுவும் இருந்தாலும் டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
  • மற்ற போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுவதை போல இந்த திட்டத்திற்கும் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.
  • ஒருவேளை இந்த வட்டி விகிதம் மொத்த வட்டி விகிதத்தில் 2% குறைந்தால் கணக்கை மூடிக்கொள்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Aadhaar Renewal : இன்னும் 2 மாதங்கள் மட்டும்தான் அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணலனா சிக்கல்!

வட்டி விகிதம் எவ்வளவு?

மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு தற்போது 7.5% வட்டி வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.

MSSC திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

இந்த மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் வெறும் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த நிலையில், ஒரு பெண் இந்த திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் ஒரு நல்ல தொகை கிடைக்கும். அதாவது முதலீடு செய்த பணம் ரூ.2 லட்சமும் 2 ஆண்டுகளுக்கான வட்டி 32,044 கிடைக்கும். அதன்படி இந்த திட்டத்தின் முதலீடு செய்வதன் மூலம் பெண்களுக்கு மொத்தமாக ரூ.2,32,044 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!