5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?

Richest Person | அமெரிக்காவின் வணிக பத்திரிக்கை நிறுவனமாக ஃபோர்ப்ஸ், 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 119.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?
முகேஷ் அம்பானி
vinalin
Vinalin Sweety | Published: 11 Oct 2024 11:41 AM

2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களை கொண்டுள்ள அந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட சில அறிக்கைகளில், கவுதம் அதானி இந்தியாவின் முதல் பணக்காரராக உருவெடுத்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். இந்த நிலையில், இந்திய பணக்காரர்கள் பட்டியல் குறித்து ஃபோர்ப்ஸ் கூறுவது என்ன என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Ratan Tata : வெறும் $5 பில்லியன் சொத்துக்களை $100 பில்லியனாக மாற்றிய ரத்தன் டாடா!

ஃபோர்ப்ஸ் 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியல்

அமெரிக்காவின் வணிக பத்திரிக்கை நிறுவனமாக ஃபோர்ப்ஸ், 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 119.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது அதானி குழும தலைவர் கவுதம் அதானி. சுமார், 116 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் 10 இடத்தை பிடித்த இந்திய பணக்காரர்கள் பட்டியல்

  1. 119.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி.
  2. 116 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி குழும தலைவர் அவுதம் அதானி.
  3. 43.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஓ.பி ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்திரி ஜிண்டால் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
  4. 40.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பிடித்துள்ளார் எச்.சி.எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார்.
  5. 32.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5வது இடத்தை பிடித்துள்ளார் திலீப் ஷங்வி.
  6. 31.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளார் ராதாகிஷன் தமானி.
  7. 30.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7வது இடத்தை பிடித்துள்ளார் சுனில் மிட்டல்.
  8. 24.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்தை பிடித்துள்ளார் குமார் பிர்லா.
  9. 24.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்தை பிடித்துள்ளார் சைரச் பூனவல்லா.
  10. 23.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளது பஜாஜ் குடும்பம்.

இதையும் படிங்க : Gold Vs FD : தங்கம் Vs நிலையான வைப்புநிதி.. இரண்டில் எது சிறந்தது?.. முழு விவரம் இதோ!

ஹூருன் இந்திய பணக்காரர்கள் முதல் இடம் பிடித்த அதனி

ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ள அதானி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஹூருன் 2024 ஆம் ஆண்டுக்காக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்தார். அவர் சுமார் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருப்பதாக ஹூருன் அறிக்கை தெரிவித்தது. இதேபோல, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் ஹூருன் தெரிவித்தது. அதாவது, ரூ.10.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அவர் கவுதம் அதானியை விட பின்தங்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முகேஷ் அம்பானி மீண்டும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. பொது குடிமக்களுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு?

ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதல் இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஃபோர்ப்ஸ் அறிக்கையில் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News