5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

New Ration Card | தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ரேஷன் அட்டை வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக பலர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற முடியாமல் உள்ளனர். இதன் காரணமாக புதிய ரேஷன் அட்டை எப்போது வழங்கப்படும்  என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 24 Jul 2024 13:55 PM

புதிய ரேஷன் அட்டை : தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை கட்டாயமாகும். ஒரு தனி நபருக்கு எப்படி ஆதார் அட்டை உள்ளதோ அதேபோல ஒரு குடும்பத்திற்கான ஆதாரமாக ரேஷன் அட்டை உள்ளது. இந்த ரேஷன் அட்டை ஆதாரம் மட்டுமன்றி இதன் மூலம் மக்களுக்கு பலவேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. ரேஷன் அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி, மாநிய விலையில் பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. எனவே இந்த ரேஷன் அட்டை மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் அட்டை குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

புதிய ரேஷன் அட்டை – அரசு வெளியிட்ட அறிப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ரேஷன் அட்டை வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக பலர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற முடியாமல் உள்ளனர். இதன் காரணமாக புதிய ரேஷன் அட்டை எப்போது வழங்கப்படும்  என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆக்ஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் கார்டில் இறந்தவர் பெயரை நீக்க வேண்டுமா.. அலைய தேவையில்லை.. ஆன்லைனில் ஈசிய பண்ணிடலாம்!

ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 2,81,000 பேர் புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இவர்களுக்கு கடந்த ஓராண்டாக புதிய ரேஷன் அட்டை வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது

தற்போது தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வெறும் 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 15,71,393 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குடும்ப அட்டை மாற்றம், புதிய அட்டை விண்ணப்பிப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் அலைய வேண்டாம் என்றும், ரேஷன் அட்டை தொடர்பான தேவைகளை www.tndps.gov.in என்ற இணையதளம் மூலம் செய்து முடித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

 

Latest News