New Rules : கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

September Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

New Rules : கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

கோப்பு புகைப்படம் (Priyanka Parashar/Mint via Getty Images)

Updated On: 

30 Sep 2024 17:21 PM

செப்டம்பர் மாதம் மாற்றங்கள் : ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர்

செப்டம்பர் மாத தொடக்க நாளான நேற்று எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்துள்ளன. அதன்படி டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.39 உயர்த்தப்பட்டு ரூ.1,691 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. 7.25 வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

ஆதார் கார்டு

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 14 ஆம் தேதித்து பிறகு ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு ஆதாரை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள ஜூன் 14 ஆம் தேதி வரை காலக்கெடு இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான எரிபொருள் மற்றும் CNG, PNG விலை

விமான எரிபொருள் மற்றும் CNG, PNG கேஸ் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு விமான போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதேபோல CNG, PNG கேஸ் பயன்படுத்துபவர்களுக்கு இது சற்று கடிணமாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்பு வழிகாட்டு நெறிமுறைகள்

போலி அழைப்புகள் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக டிராய் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்ட 140 என தொடங்கும் மொபைல் எண்களுக்கான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், வணிக செய்திகளை அனுப்ப ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் டிராய் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Hurun 2024 : ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் 10 இடத்தில் இருப்பவர்கள் யார் யார்?

எச்டிஎஃப்சி வங்கியின் மாற்றங்கள்

செப்டம்பர் மாதம் முதல் எச்டிஎஃப்சி வங்கி, பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.2,000 வரை மட்டுமே வெகுமதி புள்ளிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!