5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஃபாஸ்டேக் வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

August Changes | ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் கேஸி சிலிண்டர், ஃபாஸ்டேக் மற்றும் கிரெடிட் கார்டுகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். 

New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஃபாஸ்டேக் வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 01 Aug 2024 11:50 AM

ஆகஸ்ட் மாத மாற்றங்க : ஒவ்வொரு மாத தொடங்கத்திலும் சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு வரை பல மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை, ஃபாஸ்டேக் மற்றும் கிரெடிட் கார்டுகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை

ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியான இன்று கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்காக 13கிலோ கேஸ் சிலிண்டரின் விலை ரூ.17 உயர்த்தப்பட்டு,  ரூ.1,817 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ. 818.50-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : DA : மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியன புதிய தகவல்!

கிரெடிட் கார்டு விதிமுறைகள்

ஹெச்.டி.எஃ.சி வங்கி தனது கிரெடிட் கார்டுகளின் விதிமுறைகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது. அதன்படி, பேடிஎம், மொபிக்விக், கிரெட் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கட்டணம் செலுத்தும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமான ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரூ.50,000 வரையிலான பரிவர்த்தனைக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. அதுவே நீங்கள் ரூ.50,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.15,000-க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால் அதற்கும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே ரூ.15,000-க்கு கீழ் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால் எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Top 10 Countries : உலகில் பொருளாதாரத்தில் சிறந்த டாப் 5 நாடுகள் இவை தான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகள்

வாகனங்களிடம் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் ஃபாஸ்டேகிலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி புதிய வாகனங்கள் வாங்கிய 90 நாட்களுக்குள் ஃபாஸ்டேக் அப்டேட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். வாகனங்களின் பதிவு எண், சேஸி எண் ஆகியவை கட்டாயமாக ஃபாஸ்டேக் உடன் இணைக்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி மொபைல் எண்ணுடன் ஃபாஸ்டேக் இணைக்கப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Latest News