5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GST Council : ரூ.2,000 டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி?.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து வெளியான தகவல்!

New Update | கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.2,000 வரை நடைபெறும் பரிவர்த்தனைகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளும் நிறுவனங்கள் சுமார் 18% வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கேட்வே நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

GST Council : ரூ.2,000 டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி?.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து வெளியான தகவல்!
மாதிரி புகைப்படம் (Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images)
vinalin
Vinalin Sweety | Published: 09 Sep 2024 19:14 PM

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : இந்தியாவின் 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ரூ.2000 கீழ் செய்யப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பு உள்ளிட்ட 2 முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருந்த முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Richest Man of Asia : அதானி Vs அம்பானி.. ஆசியாவின் முதல் பணக்காரர் யார்.. ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்ன?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேம்சந்த் அகர்வால்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடித்து செய்தியாளர்கள் மத்தியில் உரையாடிய உத்தரகாண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால், ரூ.2,000 கீழ் செய்யப்படும் கேட்வே பேமெண்ட் மீதான 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவாதத்தின் போது கூடுதல் விபரங்களுக்கும், தீர்வுகளுக்காக ஜிஎஸ்டி கவுன்சில் பிட்மெண்ட் குழுவுக்கு இந்த விஷயத்தை விரிவான முறையில் ஆய்வு செய்ய அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

18% வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கேட்வே நிறுவனங்களுக்கு அனுப்பட்ட நோட்டீஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.2,000 வரை நடைபெறும் பரிவர்த்தனைகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளும் நிறுவனங்கள் சுமார் 18% வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கேட்வே நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தீயாக பரவிய நிலையில், கடும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இன்றை ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்!

அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இன்சூரன்ஸ் ப்ரீமியம்

இதேபோல ஜிஎஸ்டி கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பார்த்த மற்றொரு விஷயம் தான் ஹெல்த் இன்சூரன்ஸ் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி. ஹெல்த் இன்சூரன்ஸ் மீது விதிகப்படும் ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருவது மட்டுமன்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கடிதமும் இதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொடர்பான விவாதத்தை அடுத்த கூட்டத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

Latest News