New UPI Circle Rules : இனி ஒரே வங்கி கணக்குக்கு இரண்டு யுபிஐ.. NPCI-ன் UPI சர்க்கிள் விதிகள் கூறுவது என்ன? - Tamil News | NPCI introduced new UPI circle rules : Know what are the changes occurred in Tamil | TV9 Tamil

New UPI Circle Rules : இனி ஒரே வங்கி கணக்குக்கு இரண்டு யுபிஐ.. NPCI-ன் UPI சர்க்கிள் விதிகள் கூறுவது என்ன?

Published: 

02 Sep 2024 16:35 PM

NPCI | சாலையோர கடைகள் தொடங்கி பெரிய வணிக கடைகள் வரை யுபிஐ பயன்பாடு உள்ளது. இதனால், யுபிஐ செயலிகளில் வங்கிகள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில், கூகுள் பே மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு NPCI-ன் யுபிஐ சர்க்கிள் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

New UPI Circle Rules : இனி ஒரே வங்கி கணக்குக்கு இரண்டு யுபிஐ.. NPCI-ன் UPI சர்க்கிள் விதிகள் கூறுவது என்ன?

கோப்பு புகைப்படம் (Indranil Aditya/NurPhoto via Getty Images)

Follow Us On

கூகுள் பே :  இந்தியாவில் தொழில்நுட்ப வசதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாக மாறியுள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடியது யுபிஐ வசதி. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப பல்வேறு செயலிகள் உள்ளன. கூகுள் பே, பேடிஎம், போன்பே என பல்வேறு செயலிகள் உள்ளன. சாலையோர கடைகள் தொடங்கி பெரிய வணிக கடைகள் வரை யுபிஐ பயன்பாடு உள்ளது. இதனால், யுபிஐ செயலிகளில் வங்கிகள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில், கூகுள் பே மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு NPCI-ன் யுபிஐ சர்க்கிள் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக என்ன என்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?

கூகுள் பே பயனர்களுக்கு முதலில் அமல்படுத்தப்பட்ட விதிகள்

NPCI-ன் யுபிஐ சர்க்கிள் விதிகள் கூகுள் பே மட்டுமன்றி போன்பே, பேடிஎம் உள்ளிட்ட அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும். ஆனால், முதலில் கூகுள் பே நிறுவனம் இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவருவதை உறுதி செய்துள்ளதால் தற்போது கூகுள் பே பயனர்களுக்கு மட்டும் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுபிஐ சர்க்கிள் விதிகள் கூறுவது என்ன?

பல வங்கி கணக்குகள் வைத்திருக்கும் பயனர்கள் கூகுள் பே செயலியில் ஒரு வங்கிக்கு ஒரு யுபிஐ கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். ஏனென்றால்  மொபைல் எண் மூலம் யுபிஐ கணக்கு திறக்கப்படுவதால் ஒடிபி வெரிஃபிகேஷன் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த விதிகள் நீடிக்கப்படுகிறது. இந்த ஒரேஒரு கணக்கு விதிகளிலேயே ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது ஒரே வங்கி கணக்கில் இரண்டு யுபிஐ கணக்குகளை தொடங்கலாம். அதில் பிரைமரி மற்றும் செகண்டரி என்று கணக்குகள் பிரிக்கப்பட்டு, பணம் அனுப்புவதில் உச்ச வரம்புகள் நிணயிக்கப்படும். இதற்கு ஒரு மொபைல் எண் இருந்தால் போதும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்களை தான் யுபிஐ சர்க்கிள் விதிகள் என்று NPCI அமல்படுத்தியுள்ளது. இந்த யுபிஐ சர்க்கிள் மூலம் ஒரே வங்கி கணக்கு மூலம் இரண்டு யுபிஐ ஐடிகளை பயன்படுத்தலாம். இந்த நிலையில் 2வதாக திறக்கப்படும் யுபிஐ ஐடிக்கு எந்த ஒரு வங்கி கணக்கும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. 7.25 வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

இரண்டு யுபிஐ கணக்குகள்

அதாவது வங்கி கணக்கு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட யுபிஐ ஐடியை வைத்திருப்பவர் பிரைமரி பயனர் ஆவார். அதுமட்டுமன்றி இரண்டாவதாக செகண்டரி பயனர் யுபிஐ ஐடியியையும் அவரால் உருவாக்கிக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி இந்த இரண்டாவது ஐடிக்கு அந்த பிரைமரி பயனரால் லிமிட் விதிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version