சோமோட்டோவில் அதிகாரி பணி.. ரூ.20 லட்சம் கட்ட தயாரா? என்.டி.பி.சி பங்குகள் எப்படி?

NTPC Green Energy IPO: என்.டி.பி.சி க்ரீன் எனர்ஜி ஐ.பி.ஓ ஏலத்தின் இரண்டாம் நாள் முடிவில், 93% வரை சந்தா பெற்றுள்ளது. சோமோட்டோவில் தலைமை சிறப்பு அதிகாரி பணிக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

சோமோட்டோவில் அதிகாரி பணி.. ரூ.20 லட்சம் கட்ட தயாரா? என்.டி.பி.சி பங்குகள் எப்படி?

என்.டி.பி.சி க்ரீன் எனர்ஜி, சோமோட்டோ

Published: 

22 Nov 2024 11:20 AM

இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி.யின் துணை நிறுவனமான என்டிபிசி க்ரீன் எனர்ஜியின் ஆரம்ப பொதுப் பங்கீடு (ஐபிஓ) முதலீட்டாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏலத்தின் இரண்டாவது நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் (பிஎஸ்இ) தரவுகளின்படி, என்டிபிசி க்ரீன் எனர்ஜி ஐபிஓ 93% சந்தா பெற்றுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் 2.38 மடங்கு சந்தா செலுத்தியுள்ளனர்.

ஐ.பி.ஓ விலை என்ன?

இதில், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 34% ஆகவும், தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்கள் 75% ஆகவும் சந்தா செலுத்தியுள்ளனர். மேலும், ஐபிஓவில் 59,31,67,575 பங்குகளுக்கு எதிராக 54,97,38,180 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, தொடக்க நாளில், 33% சந்தா வீதத்தைக் ஐ.பி.ஓ கண்டுள்ளது.
இதற்கிடையில், ஒரு ஐபிஓவின் விலை ரூ.108 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.10,000 கோடி மதிப்பிலான ஐபிஓ, விற்பனைக்கான சலுகை ஈக்விட்டி பங்குகளை உள்ளடக்கியது. ஐபிஓ விலைக் குழு ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.102 முதல் ரூ.108 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முதலீட்டாளர்களுக்கு அறிய வாய்ப்பு.. ரூ.100க்கு என்.டி.பி.சி ஐ.பி.ஓ: விண்ணப்பிப்பது எப்படி?

138 பங்குகள்

இதன் முக மதிப்பு ரூ.10 ஆகும். இதில், முதலீட்டாளர்கள் 138 பங்குகளில் ஏலம் எடுக்கலாம், மேலும் 138 பங்குகளின் மடங்குகளில் கூடுதல் இடங்கள் உள்ளன. இதன், வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம், ரூ. 7,500 கோடி உள்ளன.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் அல்லது முன்கூட்டியே செலுத்துதல் மற்றும் பொதுவான கார்ப்பரேட் செலவுகளைச் சந்திக்கும்.

இலக்கு

என்டிபிசி கிரீன் எனர்ஜியின் ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, என்டிபிசி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட்டின் (என்ஆர்இஎல்) வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை நோக்கி செலுத்தப்படும்.
இது புதிய புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கான மூலதன ஒதுக்கீடு ஆகும். மேலும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதன் நிலையை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

மேலும், என்.டி.பி.சி பொதுச் சந்தா இன்றுடன் (நவ.22) நிறைவடைகிறது. இந்தப் பங்கு வெளியீட்டில், சில்லறை வணிகம், தனிநபர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், என்.டி.பி.சி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன் தாய் நிறுவனமான என்டிபிசிக்கும் ஆரம்ப பொதுச் சலுகையில் 10 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது. இது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சோமோட்டோ வேலை வாய்ப்பு

சோமோட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான தீபிந்தர் கோயல், நவம்பர் 20ஆம் தேதி, சிறப்பு தலைமை அதிகாரி பதவியை அறிவித்தார்.

அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர் சம்பளத்திற்கு பதிலாக ரூ. 20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.
இந்தப் பணம் பட்டினியை எதிர்த்துப் போராடும் சோமோட்டா வழங்கும் தொண்டு நிறுவனமான ஃபீடிங் இந்தியாவுக்கு வழங்கப்படும்.

10 ஆயிரம் விண்ணப்பங்கள்

இந்த நிலையில், தீபிந்தர் கோயல் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “எங்களிடம் 10,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உள்ளன, அவற்றில் பல நன்கு பகுப்பாய்ந்து பார்க்கப்பட்டுள்ளன: 1. எல்லாப் பணத்தையும் வைத்திருப்பவர்கள். 2.பணம் கொஞ்சம் வைத்திருப்பவர்கள் 3. பணம் இல்லை என்று சொல்பவர்கள் 4. உண்மையில் பணம் இல்லாதவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தலைம அதிகாரி பணிக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சோமோட்டாவில் குவிந்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : ரஷ்ய ரூபிள் வரலாறு காணாத சரிவு.. இந்திய ரூபாய்க்கு எதிரான மதிப்பு என்ன?

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!