Aadhaar Card | இன்னும் 10 நாட்கள் மட்டும்தான் இருக்கு.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!
Free Update | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அப்டேட் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆதார் கார்டில் திருத்தங்கள் அல்லது அப்டேட் செய்ய விரும்பும் நபர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் அதை செய்து முடிக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான FD திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!
ஆதாட் கார்டு திருத்தம்
ஆதார் கார்டை ஆன்லைன் அல்லது இ சேவை மையங்களிலும் அப்டேட் அல்லது திருத்தம் செய்யலாம். இந்த நிலையில், வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் மேல் ஆதார் கார்டில் திருத்தமோ அல்லது அப்டேட் செய்தாலோ கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி செப்டம்பர் 14-க்கு பிறகு ஆன்லைனில் ஆதார் கார்டை திருத்த வேண்டும் என்றால் ரூ.25 செலுத்த வேண்டும். அதுவே ஆஃப்லைனில், இ சேவை மையங்களில் திருத்த வேண்டும் என்றால் ரூ.50 செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் திருத்தம் மேற்கொள்கிறீர்கள் என்றால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது
ஆதார் கார்டை கட்டண்மில்லாமல் அப்டேட் செய்ய செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இன்னும் சரியாக 10 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை அப்டேட் செய்யும் பட்சத்தில் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. எனவே கட்டணமின்றி ஆதார் அப்டேட் செய்ய விரும்பும் நபர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் அப்டேட் செய்வது சிறந்ததாக இருக்கும்.
ஆதார் கார்டை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி
- அதற்கு முதலில் UIDAI-ன் https://uidai.gov.in/en/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
- அப்போது உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும் அதை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- இதனை தொடர்ந்து UIDAI தளத்தில் தோன்றும் பக்கத்தில் Address Update என்பதை கிளிக் செய்து அதில் Update Aadhaar Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு நீங்கள் அப்டேட் செய்ய வேண்டிய தகவல்களை பதிவிட்டு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : PM Kisan : பிஎம் கிசான் 18வது தவணை பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?.. உடனே இத பண்ணுங்க!
ஆதார் கார்டை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டை ஆஃப்லைனில் திருத்தம் செய்ய வேண்டு என்றால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்று, கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்து அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.