Ration Card : இனி ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் இதுவா.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?

Ration Card | ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன.

Ration Card : இனி ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் இதுவா.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Nov 2024 11:29 AM

ரேஷன் கார்டு : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.

இதையும் படிங்க : Income Tax : ரூ.2 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை.. மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி உத்தரவு!

ரேஷன் கடைகளில் இனி பாமாயிலுக்கு பதிகால தேங்காய் எண்ணெயா?

ரேஷன் கடைகளில் அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் பாமாயிலும் வழங்கப்படுகிறது. இனி பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, குறிப்பிட்ட சில மாவட்டங்களின் உள்ள ரேஷன் கடைகளில் முன்னோடித் திட்டமாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்யபொபடும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய திட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளதாக சமீபத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி ஊடகத்திடம் தெரிவித்தார். இந்நிலையில், முதற்கட்டமாக கோவை, நீலகிரி, கண்யாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான பரிசீலனையில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திய பிறகு முழு வீச்சில் செயல்படுத்தப்படும்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதிலாக அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என பொதுமக்களிடம் கருத்து கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிபின் மூலம் மக்களின் தேவையை உணர்ந்து தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் கடைகளில் தற்போது அரசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ