5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pan Card : பான் கார்டு உஷார்… அதிகரிக்கும் மோசடிகள்… திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

PAN card Scam | இந்தியாவில் சமீப காலமாக பான் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களின் தகவல்கள் திருடப்பட்டு முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் பான் கார்டு மற்றும் பான் கார்டு விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Pan Card : பான் கார்டு உஷார்… அதிகரிக்கும் மோசடிகள்… திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மமதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Jul 2024 20:50 PM

இந்தியாவில் அதிகரிக்கும் பான் கார்டு மோசடிகள் : இந்தியாவில் அதிகப்படியான பான் கார்டு மோசடிகள் நடைபெற்று வருவதாக TOI-ன் சமீபத்திய அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறும் இடங்களில் 1000-க்கு  மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் லுப்னா கப்லியால் என்ற முதிய பெண்மணி வசித்து வருகிறார். அவருக்கு சட்டத்திற்கு புறம்பாக ரூ.1.3 கோடி மதிப்பிலான சொத்தை விற்றதாக வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. படிப்பறிவு இல்லாதது மற்றும் புற்றுநோயால் பாதிகப்பட்ட காரணங்களால் அதை அவர் கவனிக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூதாட்டியின் பான் எண் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வாதாடினார்.

பான் கார்டு மோசடியில் சிக்கிய மூதாட்டி

இந்நிலையில் சொத்து பதிவாளர் மற்றும் வாங்குபவரிடம் இருந்து உரிய விவரங்களை பெற்று விசாரணை நடத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பதிவாளரிடம் இருந்து முழுமையான தகவல்களை சேகரித்து, மூதாட்டிக்கு நீதி கிடைக்க உறுதி செய்யுமாறு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. படிப்பறிவில்லாத மூதாட்டியின் பான் விவரங்கள் திருடபட்டு இவ்வளவு பெரிய மோசடி நடத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்ல இந்தியாவில் இதுபோன்ற பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாக TOI தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சில நோக்கங்களுக்காக பொதுமக்களின் விவரங்கள் பகிரப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க : EPFO : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பிஎஃப் கணக்கில் வரப்போகும் ரூ.50,000.. EPFO வெளியிட்ட புதிய அறிவிப்பு!

மத்திய நேரடி வரிகள் வாரியம் பதில்

இதற்கு பதிலளித்த மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), பொதுமக்கள் தங்கள் பான் கார்டு அல்லது பான் தகவல்களை அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களால் கட்டாயமாக்கப்படாத அல்லது பொது இடங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

தற்போது பான் டேட்டாபேஸ் 70 கோடிக்கும் அதிகமாக உள்ளது. பான் எண்ணை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பான் கார்டை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகம் இருந்தால் புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாதம் ரூ.40-க்கும் குறைவாக செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம்.. முழு விவரம் இதோ!

எனவே பொதுமக்கள் தங்கள்  பான் கார்டு விவரங்களை யாரிடமும் பகிராமல் இருப்பது மற்றும் பான் கார்டு தவறாக பயன்படுத்தபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தால் உடனடியாக புகார் செய்வதன் மூலம் பான் கார்டு மோசடிகள் கட்டுக்குள் கொண்டுவரப்ப்படும் என எதிர்ப்பர்க்கபடுகிறது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிவுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

Latest News