Passport : பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு செயல்படாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Tamil News | Passport website services will be suspended from August 29 to September 2 due to maintenance in all over India | TV9 Tamil

Passport : பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு செயல்படாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Service Suspend | வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாக உள்ளா நிலையில், அனைவரும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் பாஸ்போர்ட் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Passport : பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு செயல்படாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாஸ்போர்ட்

Published: 

28 Aug 2024 12:08 PM

பாஸ்போர்ட் இணையதளம் செயல்படாது : ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிக்க வேண்டும் என்றால் பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயமாகும். சில நாடுகள் விசா விலக்கு வழங்குகிறது. எனவே அந்த நாடுகளுக்கு செல்வதற்கு விசா அவசியமில்லை. ஆனால் எந்த நாட்டிற்கு சென்றாலும் பாஸ்போர்ட் கட்டாயமாகும். பாஸ்போர்ட் இல்லை என்றால் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டிற்கு செல்ல முடியாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் அது சட்ட விரோதம் ஆகும். வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாக உள்ளா நிலையில், அனைவரும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் பாஸ்போர்ட் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar | செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!.. ஆதார் குறித்து வெளியான முக்கிய தகவல்!

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது. பாஸ்போர்ட் சேவை இணையதளங்களில் ஆக்ஸ்ட் 29 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆக்ஸ்ட் 30 ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் ஆவண சரிபார்ப்பு நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!

3 நாட்களுக்கு இயங்காது – சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு

இதேபோல தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்கள், நேர்காணலை பிற நாட்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளங்கள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஆல்பம்
வைரலாகும் ரம்யா பாண்டியனின் மேரேஜ் போட்டோஸ்
காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
மகப்பேறுக்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்.. அறிகுறிகள் என்ன?