Paytm : அதிரடியாக உயர்ந்த Paytm நிறுவனத்தின் வருவாய்.. காரணம் இதுதான்! - Tamil News | Paytm bounce back to its january 2024 income | TV9 Tamil

Paytm : அதிரடியாக உயர்ந்த Paytm நிறுவனத்தின் வருவாய்.. காரணம் இதுதான்!

Updated On: 

19 Jul 2024 17:21 PM

Paytm Revenue | Paytm நிறுவனம் நாட்டிலே மிகப்பெரிய IPO கொண்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பல முக்கிய முடிவுகளை எடுத்தார். அவை தற்போது நிறுவனத்தின் வருவாயில் பிரதிபளிக்க தொடங்கியுள்ளன. அதன்படி Paytm தனது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. மேம்பட்ட செயல்பாட்டு வருவாய் காரணமாக நிறுவனத்தில் ஒட்டுமொத்த இழப்பும் குறைந்துள்ளது.

Paytm : அதிரடியாக உயர்ந்த Paytm நிறுவனத்தின் வருவாய்.. காரணம் இதுதான்!

பேடிஎம்

Follow Us On

Paytm நிறுவனம் : இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் ஒன்றான Paytm-ன் உரிமையாளரான One 97 Communications மீண்டும் வலிமையடைய தொடங்கியுள்ளது. Paytm சமீபத்தில் தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது. அதன்படி UPI கட்டணங்களை தவிர, QR குறியீடு கட்டண சேவை, சவுண்ட் பாக்ஸ் மற்றும் பிறவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த நிறுவனத்தின் வருவாயும் அதிகரித்து வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டின் காலாண்டில், அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ.1,500 கொடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

Paytm நிறுவனம் நாட்டிலே மிகப்பெரிய IPO-யை கொண்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பல முக்கிய முடிவுகளை எடுத்தார். அவை தற்போது நிறுவனத்தின் வருவாயில் பிரதிபளிக்க தொடங்கியுள்ளன. அதன்படி Paytm தனது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. மேம்பட்ட செயல்பாட்டு வருவாய் காரணமாக நிறுவனத்தில் ஒட்டுமொத்த இழப்பும் குறைந்துள்ளது.

Paytm நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய்

பங்குச் சந்தை அளித்துள்ள தகவலின்படி, ஏப்ரல் – ஜுன் மதத்தில் செயல்பாட்டு வருவாய் ரூ.1502 கோடியாக இருந்ததாக Paytm தெரிவித்துள்ளது. Paytm நிறுவனத்தின் சிறந்த வருவாய் காரணமாக அதன் லாபமும் வரும் காலத்தில் மேம்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நிதிச் சேவைகள் மூலம் நிறுவனம் ரூ.280 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதேபோல மார்கெட்டிங் சேவைகள் மூலம் ரூ.321 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் லாப வரம்பு 50% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நிறுவனத்தின் பங்களிப்பு லாபம் ரூ.755 கோடியாகவும், நிறுவனத்தின் இருப்பு ரூ.1,108 கோடியாகவும் உள்ளது.

இதையும் படிங்க : Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இதுதான்.. அபராதம் மற்றும் கட்டணம் குறித்த முழு தகவல் இதோ!

Paytm செயலியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாக, நிறுவனத்தின் வணிகம் கடந்த ஜனவரி மாத நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் மீண்டும் QR குறியீடுகள் மற்றும் சவுண்ட்பாக்ஸ்களை கஃபைகளில் நிறுவத் தொடங்கியுள்ளது Paytm. இந்நிலையில் நிறுவனத்தில் சந்தாதாரர் எண்ணிக்கை தற்போது 1.09 கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Amazon Prime Day : அமேசான் அள்ளித்தரும் ஆஃபர்.. ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு கம்மியா? முழு விவரம்

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version