5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு முக்கியச் செய்தி.. இன்று ஒரு நாள் மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

One day offer | ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு முக்கியச் செய்தி.. இன்று ஒரு நாள் மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!
கோப்பு புகைப்படம் (Abhishek Chinnappa/Getty Images)
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Nov 2024 11:28 AM

ரேஷன் பொருட்களில் அதிரடி மாற்றம் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்!

அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்

ரேஷன் கடைகளில் வழக்கமாக மாத கடைசி நாளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படாது. ஆனால், இந்த மாதம் ஆக்ஸ்ட் 31 ஆம் தேதியான இன்று அனைத்து அத்தியாவசிய பொருட்களையும், அனைத்து கடைகளிலும் வங்கிக்கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இந்த மாதம் பொருட்களை வாங்காதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆனால் இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்று நோக்கத்தில் ஆகஸ்ட் 31, 2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும். எனவே இந்த வாய்பை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்களை வாங்காத பயனர்களை அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா?.. இந்த 8 காரணங்களாக கூட இருக்கலாம்.. உடே செக் பண்ணுங்க!

ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

ரேஷன் கடைகள் மூலம் மாதம் மாதம், அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படும். இதுபோன்ற சூழலில், தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத நுகர்வோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் நுகர்வோர் ரேஷன் கடைக்கு வரவில்லை என்றால், அவர்களது பெயர் நீக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தகுதியான மற்றொருவரின் பெயரைச் சேர்த்து காலி இடம் நிரப்பப்படும்  என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News