Ration Card : பண்டகமில்லா குடும்ப அட்டை.. ரேஷன் கார்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
TN Government | ரேஷன் அட்டை மற்றும் ரேஷன் கடைகள் சமானிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலையில், அது குறித்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரேஷன் பொருட்களை வாங்க விரும்பாதவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. ரேஷன் அட்டைகள் குடும்பங்களின் ஆதாரமாக மட்டுமன்றி, வாழ்வாதரத்தையும் வழங்குகின்றன. இந்த ரேஷன் அட்டைகள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதாவது ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு மாநிய விலையில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ரேஷன் பொருட்கள் இல்லாமல் வெறும் ரேஷன் அட்டையை மட்டும் பெறும் வகையில் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன, இந்த புதிய அறிவிப்பு யாருக்கெல்லாம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Paytm : புதிய அம்சத்துடன் களமிறங்கிய பேடிஎம்.. இனி அனைத்திற்கும் “PIN” நம்பர் தேவையில்லை!
மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ரேஷன் அட்டைகள்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் அட்டைகள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், வருமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மாநிய விலையில் அரசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொதுவாக கடைகளில் விற்பனை செய்யபப்டுவதை விட, ரேஷன் கடைகளில் விலை குறைவாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் உணவு தேவைகளுக்காக ரேஷன் பொருட்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். பசி, பட்டினி இல்லாத நாட்டை கட்டமைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!
ரேஷன் அட்டை குறித்து வெளியான முக்கிய தகவல்
ரேஷன் அட்டை மற்றும் ரேஷன் கடைகள் சமானிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலையில், அது குறித்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்க விருப்பம் இல்லாத பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டை பண்டகமில்லா குடும்ப அட்டையாக ( No Commodity Cards) மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரேஷன் அட்டைகளை பண்டகமில்லா குடும்ப அட்டையாக மாற்றும் நிலையில், குடும்ப அட்டையை வெறும் அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்த முடியது. மற்றபடி, அரிசி, பருப்பு உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் அந்த அட்டைகளுக்கு வழங்கப்படாது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முன்வராததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office RD : ரூ.5,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.8 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்!
பண்டகமில்லா ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த புதிய அறிவிப்பின் மூலம் ரேஷன் பொருட்களை வாங்க விரும்பமில்லாதவர்கள் வெறும் ரேஷன் அட்டையை மட்டும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பண்டகமில்லா ரேஷன் அட்டைகளை வாங்க விரும்பும் நபர்கள், www.tnpds.in என்ற இணையதள் மூலம் தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் அட்டை மட்டும் வேண்டும் அதில் வழங்கப்படும் பொருட்கள் தேவியில்லை என விரும்பும் நபர்கள் தாராளமாக இந்த பண்டகமில்லா ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்யப்படுவதன் மூலம், ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் எவை செயல்பாட்டில் இல்லை என கருதப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.