IT Refund : உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா?.. இது கூட காரணமாக இருக்கலாம்!
Income Tax | அதன்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்றும் வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
வருமான வரி திரும்ப பெறுதல் : இந்தியாவில் குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படும். அதன்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்றும் வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பை அடுத்து, பெரும்பாலானோர் வருமான வரி செலுத்தி முடித்தனர். தற்போது, வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : EPF Insurance | PF உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இன்சூரன்ஸ்.. முழு விவரம் இதோ!
தமிழகர்களுக்கு வழங்கப்படாத வருமான வரி ரீஃபண்ட்
வருமான வரி திரும்ப பெறுதல் குறித்து சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ள நபர் ஒருவர், உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் வந்துவிட்டதா. வடக்கில் இருப்பவர்களிடம் கேட்டால் ரீஃபண்ட் வந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் தமிழர்கள் யாருக்கும் ரீஃபண்ட் வரவில்லை என்று பதிவிட்டுள்ளர். அவரின் பதிவுக்கு பதிலளித்த தமிழர்கள் பெரும்பாலானோர், தங்களுக்கு ரீஃபண்ட் வரவில்லை என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 2.48 கோடி ரீஃபண்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 14 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அவ்வாறு ரீஃபண்ட் வழங்கப்படாததற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Income Tax Refund : வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்.. பான் கார்டு இருந்தால் போதும்.. சுலபமா தெரிஞ்சுக்கலாம்!
என்ன என்ன காரணங்கள்?
- வருமான வரி ரிட்டன் படிவத்தில் தவறான அல்லது முழுமையடையாத தகவல் கொடுக்கப்படுவது.
- வங்கி விவரங்கள், முகவரி அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றில் ஏதேனும் பிழை அல்லது முரண்பாடு இருந்தால்.
- வருமான வரி தாக்கல் செய்துவிட்டு இ வெரிஃபிகேஷன் செய்யாமல் இருப்பது. வருமான வரி தாக்கல் செய்ததில் சுமார் 12 லட்சம் பேர் இ வெரிஃபிகேஷன் செய்யாமல் உள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு ரீஃபண்ட் செலுத்துவதில் தாமதம் உள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த காரணங்களுக்காக வருமான வரி ரீஃபண்ட் செய்யப்படாமல் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு ஒருவேளை ரீஃபண்ட் வரவில்லை என்றால் இந்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்துவிட்டு வருமான வரி துறையை தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம்.